பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுலக மேதை பெர்னாட்சா

103

ஷாவின் முதல் பத்துநாடகங்களும் மக்கள் வாழ்வியற் களத்தை ஒவ்வொரு துறையில் தாக்குபவையாகவே இருந்தன. அவற்றின் வசைத்திறம் அவர் ஆற்றலைக் காட்டிற்று. ஆனால், ன்பநாட்டமுடைய மக்களை அது கவரவில்லை என்று அவர் கண்டார். எனவேதான் முதன் மூன்று நாடகங்களையும் உவர்ப்பான நாடகங்கள் என்று பெயரிட்டு ஒதுக்கி, உவப்பான நாடகங்கள் என்ற அமுத்த தொகுதி இயற்றினார். இவற்றிலும் அவர் வசைநோக்குக் கலந்தே இருந்தது. இவையும் ஆர்வத்துடன் வரவேற்கப் பெறவில்லை. எனவே, வசை, இன்பக் கவர்ச்சி ஆகிய இரண்டையும் விடுத்து, நேரிடையாக அறிவுரை கூறும் ‘தூநெறி யாளர்க்கான நாடகங்கள்' என் அடுத்த தொகுதியில் முனைந்தார். இவையும் அவர் எதிர்பார்த்த பயன் தர வில்லை.

மேலும் அவர் புதுமை மேடையின் குறிக்கோளை அவா வினும், செல்வமேடையின் நல்வாய்ப்புக்களையும் அவற்றுட னேயே தொடர்புகொண்டிருந்த உயர் தரக் கலைநடிகரையும் தம் நாடகக்கலையில் ஈடுபடுத்த நினைத்தார். அம் மேடையையும் அதன் நடிகரையும் எதிர்பார்த்தே நாடகம் எழுதியதன் காரணம் இது. அம் மேடையை எப்படியாவது முற்றுகையிட்டுப் பிடித்து விடவும், அக்கலை நடிகரை எப்படியாவது வசப்படுத்தித் தம் நாடகங்களை ஆடவைக்கவும் அவர் அரும்பாடுபட்டார். இவ்விரண்டிலும் அவர் எளிதில் வெற்றிபெறவும் இல்லை; என்றும் முழுவெற்றிபெறவுமில்லை. அவர் புகழ் இம்மேடை களைத் தாண்டிச் சென்றன. அம்மேடைகள் தலைவணங்கின; அவ்வளவே! அவர் கருத்துக்கேற்க அம்மேடைகள் மாறிவிடவு மில்லை. அவர் நாடகங்களை நடத்தி அவை வெற்றிபெற வழிகாணவுமில்லை. மேடையாளர் தம் வழக்கமான நாடக வெற்றிகளிடையே, சிறிது அவர் புகழுக்காக விட்டுக்கொடுத்து அவர் நாடகங்களையும் ஆடத் துணிந்தனர். ஆயினும் எதிர் காலத்தில் உலகநாடக மேடையை அவர் கைப்பற்றுதல் கூடியதே. ஏனெனில் அவர் காலத்திலேயே, இங்கிலாந்தைவிட ஜெர்மனி யிலும்,ஜெர்மனியைவிட அமெரிக்காவிலும் அவை வெற்றி காண

முடிந்தன.

செய்தியிதழ்த் துறையில் ஷாவின் நிமிர்ந்த வாய்மை, அவர் முன்னேற்றத்தைத் தடுத்ததுபோலவே, செல்வ மேடையிலும்