பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுலக மேதை பெர்னாட்சா

105

எடுத்துக்காட்டாக, மேடையில் வலம் எது இடம் எது என்பதில் மேடைவாணரிடையே ஒருமுகத்திட்டமில்லாமல் குழப்பநிலை இருந்து வந்தது. (தமிழ் இலக்கண வாணரிடையேயும் உரை யாசிரியரிடையேயும் இடமுன், காலமுன் ஆகிய இரு 'முன்'கள் இருந்து குழப்பம் தருவது இங்கே ஒப்பிட்டுக் காணத்தக்கது). ஷா மேடை நடிகரை அளவையாகக் கொள்ளாது காண்போரையே அளவையாகக்கொண்டு வலம், இடம் ஆகியவற்றை ஒரு நிலைப்படுத்தினார். அவர் நீண்ட விரிவான திரைக்கட்டளைகள் திரைக்கே அறிவுறுத்தா யமைந்தன.

நாடகவெளியீட்டுடன் வெளியீடாக ஷா நாடகம் பற்றியும், நாடகத்திற் குறிப்பிடப்பட்ட வாழ்க்கைக் குறிப்புக்கள் பற்றியும், காலத்திற்கேற்ற கருத்துரைக் கட்டுரைகள் எழுதி, டிரைடனைப் போல் முன்னுரைவடிவில் தந்தார். நாடகங்களை வாசிப்பவர், வாசிக்குமுன் படிக்காவிட்டாலும், வாசித்தபின் அவற்றைப் படித்து நுகர்வது உறுதி என்பதை மக்கள் உளப்பாங்கறிந்த அவர் உணர்ந்திருந்தார். நாடகமேடைக்குச் செல்லாதவரும் வாசிப்பராதலால், வாசிப்பவர் தொகையைப் பெருக்கி, அவர் நாடகம் காண்பவர் தொகையையும் பெருக்க முனைந்தார். அவர் நாடகம் பற்றிய குறிக்கோளை இப் புதுக்குழு உணருமாதலால், நாடகமேடையும் மாறுபட இடமுண்டு. இத்துணையும் நிகழ நாளாகுமாயினும், அவர் காலத்திலேயே அவர் மேடை கடந்த புகழாளர் என்பதை உலகம் உயர்ந்துகொண்டது. அவருக்கும் அவர்நாடகங்களுக்கும் செல்வரின் சீரிய மேடை அவ்வப்போது வாயில் திறந்து வணங்கி வரவேற்பளிக் கலாயிற்று.

இம் முழு வெற்றிக்கிடையில் அமெரிக்கநாட்டு மேடையின் வருவாய் ஷாவின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திற்று. மண வாழ்வால் திருமதி ஷாவின் செல்வநிலை அவருக்கு உண்மையில் கலைசாரா விடுதலைவாழ்வே அளித்தது. ஆயினும், 1904-க்குள் அவர் தம் நாடகங்களின் கதையாசிரியர் பங்குரிமை(royalty) மூலமே நல்வாழ்க்கை ஊதியம் பெறத்தக்க நிலையை அடைந்தார். அத்துடன் அவர் முற்றுகையிட்ட செல்வர் மேடையிலும் 1901 முதல் 1907 வரை அவருக்கு முழுவரவேற்புக் கிட்டிற்று.

இருபதாம் நூற்றாண்டின் வாயில் திறந்தவுடன் ஷா அதனை வரவேற்க இயற்றிய முதல்நாடகம் “பாங்கான பாஷ்வில்