(106) ||
அப்பாத்துரையம் – 8
அல்லது பயனடையாப் பற்றுறுதி(admirable bashville or constancy unrewarded)" என்பது. இது ஷாவின் புனைகதைகளுள் ஒன்றான “காஷெல் பைரனின் வாழ்க்கைத் தொழி”லின் நாடக உருவம். இது முழுதும் செந்தொடை யாப்பில்(blank verse) எழுதப் பெற்றுள்ளது. 1901-ல் உள்ள உலகப் பொதுச் சட்டமரபுப்படி நூலாசிரியர் உரிமை நூலுக்கன்றி நூலின் நாடக வடிவத்துக்குச் செல்லுபடியாகாது. அமெரிக்காவில் அது நாடகமாக்கி நடிக்கப்பட்டபின், இங்கிலாந்தில் அவ்வுரிமையைக் காத்துக் கொள்ளவே அது மிக விரைவில் நாடக வடிவாக்கப் பட்டது. இதை ஏன் செந்தொடையாப்பில் எழுத வேண்டும் எனற கேள்விக்கு ஷா தரும்விடை வழக்கம்போல வினாவுக்கு விடையாகாமல், புதிய வினாக்களை எழுப்புவதாயுள்ளது. "உரைநடை யெழுதுவதைவிட செந்தொடை எளிதானது. ஷேக்ஸ்பியர் செந்தொடையைப் பெரிதும் பயன்படுத்தியதன் காரணம் இதுதான். உரைநடையில் ஒருமாதத்தில் எ ஒருமாதத்தில் எழுதிமுடிக்க வேண்டுவதை ஷேக்ஸ்பியர் செந்தொடையில் எழுதியதனால் ஒரு வாரத்துக்குள் முடித்தார்!" என்பதே அவர் விளக்கம். ஷாவின் கருத்துரைக் குறும்புக்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டு. ஆனால், இக் குறும்புநகையை நாம் காண்பது இவ் விளக்கத்தில் மட்டுமன்று. நூல் முழுவதும் ஷேக்ஸ்பியர் செந்தொடையாப் பினுக்கு ஒரு கேலிச்சித்திரமாகவே இயல்கின்றது. எனினும், அது சுவையூட்டவும் தவறவில்லை.
ய
"பாங்கா கானபாஷ்வி”லையடுத்து, “மனிதனும் மீமிசை மனிதனும்," "ஜான்புல்லின் மற்றத்தீவு,” “அவள்கணவனிடம் அவன் புகன்ற பொய்ம்மை,” “மேஜர் பார்பாரா,” “நசை, நஞ்சு, நமைச்சல் அல்லது பாழ்செய்யும் கடுநீர்க் கருவி,” “மருத்துவர் இருதலை மணியம்,” ஆகிய நாடகங்கள் வெளிவந்தன. இவற்றுள், மனிதனும் மீமிசை மனிதனும், “ஜான்புல்லின் மற்றத்தீவு,” “மேஜர் பார்பாரா,” “மருத்துவர் இருதலை மணியம்" ஆகிய நான்குமே, ஷாவின் கலை தம் உச்சநிலையடைந்த இக்காலப் புகழ் மேடையின் நான்கு பொற்கால்களாகக் கருதத்தக்கன.
சீவகனைப்போலக் கன்னியர் வேட்டையாடும் டான் ஜூவான் என்றஸ்பானியக் கதையை நாடகமாக்கும்படி ஷாவிடம் ஒரு நண்பர் கூறியிருந்தார். ஷா அதில் வரும் ஸ்பானிஷ் பெயர்