அறிவுலக மேதை பெர்னாட்சா
107
களையும் பின்னனி வண்ணங்களையும் ஆங்கில மயமாக்கி எழுதிய நாடகமே, 'மனிதனும் மீமிசைமனிதனும்(man and superman)' என்பது. இதனை இன்பநாடக உருவான மெய்விளக்க நூல்(A comedy and philosophy) என்று ஷா குறித்துள்ளார். ஷாவின் நாடகங்களுள் அவர் முழுவாழ்க்கைக் கோட்பாட்டையும் தீட்டிக் காட்டும் முதல் நாடகமும், முதன்மை வாய்ந்த நாடகமும் இதுவே. ஷாவின் பிற்கால நாடகங்களுக் கெல்லாம் இது ஒரு நல்ல முன்மாதிரியான தலைமணியாய் விளங்குகிறது. அதன் கதையுறுப்பினர்கள் உயிருடை மனிதர்கள் போலவே செயலாற்றுபவர். உயிருடை மனிதர் எண்ணங்களும் உணர்ச்சி களும் விருப்பு வெறுப்புக்களும் உடையவர். ஆனால், ஷாவின் நாடகங்களில் அவர்கள் உள்ளுணர்ச்சிகள் உணர்வு நிலையடைந்து அறிவாராய்ச்சியாகிச் சொல்லாடலாகக் காட்சி யளிக்கின்றன. உறுப்பினர் பண்போவியங்களும் தனிமனிதன் நிலையிலிருந்து பொது மனிதநிலைக்கு உயர்த்தப்படுகின்றன. ஆணுலகின் பொது நிலை ஆட்பேராக ஜான்டானரும் பெண்ணுலகின் பொது நிலை ஆட்பேராக ஆன் விட்ஃவீல்டும் இடம் பெறுகின்றனர்.
‘உயிராற்றல்,(life force)' என்ற சொல் இந் நாடகத்திலேயே முதன் முதலாகவும், பெருக்கமான அளவிலும் கையாளப் படுகிறது. மனிதநாகரிகத்தை மேம்படுத்திக்கொண்டு செல்லும் ஒரு ‘முழு நிறைவலிமை,' என இதனைக் குறிக்கலாம். கடவுளினிடமாக ஷா கொண்ட ‘ஆற்றல்’ இது. ஆனால் சமயவாளிகள் கருதும் ‘கடவுளி’னிடத்திலிருந்தும், உலகியலறிஞர் கூறும் இயற்கை(nature) யிலிருந்தும் இது கருத்தளவில் மாறுபட்டது.கடவுள் இயற் கையையும் உயிரையும் படைத்த ஒரு நிறையாற்ற லாகவே கொள்ளப்படுகிறார். இயற்கையாற்றலோ உயிருக்குப் புறம்பான உயிரிலா உலகின் ஆற்றல். ஆனால், உயிராற்றல் இயற்கையை ஆட்கொண்டு உயிரை இயக்கும் ஆற்றல். இவ்வுயிராற்றலின் தன்மையினாலேயே உயிர்கள் உயிரிலா இயற்கை அல்லது புறஉலகையும், மனிதன் புறஉலகையும், ஏனை உயிர்களையும் வென்று ஆளுகிறான். உயிர்களும் மனிதனும் இவ் வுயிராற்றலின் கருவிகள்மட்டுமே. எல்லா உயிர்களின் செயல்களும், எல்லா மனிதரின் செயல்களும்
ன