பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ||- ||– –

அப்பாத்துரையம் – 8

இவ்வுயிராற்றல் அவ்வவர்களைக் கருவிகளாகக்கொண்டு நின்று, மறைந்து இயக்கிச் செயலாற்றும் செயல்களே.

ஆண்மை, பெண்மைபற்றிய ஷாவின் கருத்தும் இந் நாடகத்தில் தெள்ளத்தெளியக் காட்டப்படகிறது. மனிதன் இயற்கையை வென்றாளூம் செயலில், வெல்லுதல் ஒரு செயல்; ஆளுதல் அல்லது பேணுதல் மற்றொரு செயல். மன்னர் போரில் நாடுபிடிப்பது அல்லது பிறரை மடக்கு வதுபோன்றது வெல்லும் செயல். வெற்றியை நிலையாக்கி, அடுத்த வெற்றிக்கான மூலமுத லாக்குவதுபோன்றது ஆளும்செயல். வெல்லும்செயலைச் செய்வது ஆண்மை; இது வீரன் அல்லது ஆணின் தன்மை. ஆளும் செயலை அதாவது, பேணும் செயலைச் செய்வது பெண்மை அல்லது பெண்ணின்தன்மை. பொதுப்பட ஆண் புதுமையில் முனைகிறான். பெண் புத்தறிவைப் பழைய அறிவுடன் வகுத்துத் தொகுத்துப் பழமை பேணுகிறாள். ஆண் செயலில் முந்துகிறான். பெண் அவனை வாழ்க்கையிற் பிணைத்து அச் செயலை மரபுகடந்து நீடிக்கச்செய்கிறாள். எனவேதான் ஆன் விட்ஃவீல்டிடம் உயிராற்றல் டானரை வயப்படுத்தி ஈர்க்கவல்ல காதலாக இயங்குகறிது.

தனிச்சிறப்புடைய மனிதர், ஆடவராயினும் பெண்டிரா யினும்,பொதுமனிதர்போலப் பொதுநிலைவாழ்வில் கட்டுப்பட்டு நிற்பதில்லை; புது நெறியில் முனைவர். ஆனால், இத்துறையில் சிறப்பாக முனைபவன், முனையவேண்டியவன் ஆணே. ஜான் டானர் அத்தகைய ஆணாகத் தோற்ற மளிக்கிறான். அவன் ஆனிடம், "உயிராற்றலே என்னை மயக்குகிறது. நான் உன்னைக் கட்டிப் பிடிக்கும்போது, உலக முழுமையும் என் கைக்குள் அமைவதாகத் தோற்றுகிறது. ஆனால், நான் அதனை எதிர்த்து, என் விடுதலைக்காக, என் தன்மதிப்புக்காக, என்னுடன் இரண்டற ஒன்றி நிற்கும் ஒன்றினுக்காக - எனக்காகப் போராடுகிறேன்,' என்று கூறுகிறான். ஆனால், காதலிலும் உயர்ந்ததில்லை என ஆன் கட்டுரைக்கிறாள்.

>>

காதல்வாழ்வு உலகவாழ்வின் நட்புக்கும் தொடர்புக்கும் உரியதே. பெரும்பான்மை ஆடவர், பெண்டிர் அதில் நிற்பர். ஆனால், அதனைத் தாண்டி வாழ்க்கையை உயர்த்துபவரே,மனித இனம் உயரப் பாடுபடுவரே, ‘உயிராற்றலின்' முனைத்த உருவான