அறிவுலக மேதை பெர்னாட்சா
(113
வாளரின் எந்தப் போராட்டக் கூச்சலுமன்று; வறுமை ஒன்றேதான்.”
'மீட்புப்படை(salvation army)' என்ற சமயப் பணியாளரை தாக்குவது போல் நாடகம் தோற்றமளிக்கிறது. ஆனால், உண்மையில் அது அவர்கள் நற்சிறப்புப்பண்புகளை எடுத்துக் காட்டிச் சில குறை பாடுகளையும் அன்பு நகையுடன் சுட்டிக்காட்டுவதாகவே உள்ளது.
ஷாவின் நாடகமேடை வருமானப் பங்கே அவர் வாழ்க் கையின் தற்சார்புக்குப் போதியதாக வளர்ந்தது இவ்வாண்டிலேயே. அவர் புகழ்மேடை நாடகத்தில் இறுதி நாடகம் 1906-ல் இயற்றப் பெற்ற மருத்துவர் இருதலை மணியும்† என்பது. இது மருத்துவத் துறையின் சட்ட திட்ட அமைப்புக்களையும் மருத்துவர் போலிநடவடிக்கைகளையும் நையாண்டி செய்வது. ஆனால், இந் நாடகம் மருத்துவத் துறையில் பல சீர்திருத்தங் களுக்கும் வழிகாட்டியுள்ளது. இன்னும் வழிகாட்ட வல்லது. மக்கள் உயிர்ப்பாதுகாப்பு, உடல்நலம் ஆகியவற்றுக்குரிய இத்துறை தனி மனிதர் கையில் விடக்கூடாது; அறிஞர் கூட்டுற வாதரவுகள் கூடிய அரசியலே திட்டமாயமைய வேண்டும் என்பதை அவர் முன்ரையிலும் விளக்கமாகக் கூறியுள்ளார். இதில் வரும் மருத்துவர்கள் மருத்துவராக மட்டுமன்றி மனிதரா கவும், சிறந்த பண்போவியங்களாகவும் அமைகின்றனர். அவர்கள் மருத்துவக் கருத்துவேறுபாடுகளுக்கிடையே ஒரு கலைஞன் மாள்கிறான். அக்கலைஞன்மீது குற்றம் எதுவும் காணப் பொறாத அவன் காதலி, அவன் இறந்தபின்பும் அவன் பெருமையை நிலைநாட்டி மகிழ்கிறாள்!
கடன் வாங்குவதையே தொழிலாகக்கொண்டு ‘பகைமை யின்றி' ஏய்க்கும் ஒரு நல்ல ஏழை மருத்துவனும் இந்நாடகத்தில் ஒரு உறுப்பாகிறான். இந்நாடகம் பெயரளவில் சாவும் கொலையும் காட்டினும், அவை அச்சம் நடுக்கம், பெருமிதம் ஆகிய உணர்ச்சி களைக் கிளறாது. கனிவு, நகை, வசை ஆகிய சுவைகளையே தருகின்றன.
திருமதி ஷா விரும்பிப் பாராட்டிய நாடகம் இதுவே என அறிகிறோம். நாட்டுப்பற்றாளர், மனிதஇனப்பற்றாளர் ஆகியவர்களை ஒரு தனித்துறையில் அறிவுநெறியில் கொண்டு