114
அப்பாத்துரையம் – 8
செலுத்தி மெய்ந்நெறி காட்டும் நாடகம் இது என்பதில் ஐயமில்லை.
ஷாவின் நாடகக்கலை 1901 முதல் 1907 வரை இங்ஙனம் புகழின் உச்சியையும், வெற்றியின் உச்சியையும் எட்டிற்று. ஆனால், அடுத்த மூன்றாண்டுகளிலும் அவர் மைக்கோல் மூனையைவிட்டுக் கலைச்செல்வி விலகித் துயில் கொண்டாள் என்னல் வேண்டும். "நாடகமேடை இடைக்காட்சி(interlude at the play house)” “மணம் புரிதல்,(getting married)” “பிளாங்கோ பாஸ்னெட்டின் சாயம் வெளுத்தல்(the shewing up of Blanco Posnet)” “செய்தி யிதழ்த்துண்டுகள்(Press cuttings)” “சிங்காரக் குழவி (Fascination founding)" "மெய்ம் மையின் காட்சி(a glimpses of reality)” “பொருந்தா மணம்(misalliance)” காதற்பாடலில் குறிக்கப் பெற்ற காரழகி(the dark lady of the sonnets)” என்பவை இச் சிறு திற நாடகங்கள்.
இறுதி நாடகம் ஷேக்ஸ்பியர் காதற் பாடல்களிலிருந்தும், அவர் நூற்குறிப்புக்களிலிருந்தும் அவர் வாழ்க்கையின் தலைமை யுணர்ச்சிக் கோவை ஒன்றை உருவாக்கித் தீட்டிற்று. 'மணம் புரிதல் மணவிழா பற்றியது. இது நீண்ட உரையாடல் ஒன்றன் மூலமே நாடகமா யியலும் தனித்தன்மையுடையது. ‘செய்தியிதழ்த் துண்டுகள்' குடியுரிமைகள், நாகரிக உரிமைகளுக் கெதிராகப் படை வலிமையை வழங்கும் வழக்கத்தைத் தாக்கும் ஒரே வசையுரை. அதில் கோரப்பட்ட பெண்டிர் மொழியுரிமையும், படைவீரர் குடியுரிமையும் அத்துறைச் சீர்திருத்தங்களுக்கு நல்ல வழிகாட்டியாயின. 'பொருந்தா மணம்' கருத்திலும் காட்சியிலும் புத்தம்புது நடப்புக்களைப் படம் பிடித்துக் காட்டும் சிறப்பு டையதாக அமைக்கப்பட்டது.
1911-ல் கலைச்செல்வி துயில்நீங்கி மீண்டும் ஷாவின் மைக் கோலில் நட மிடலானாள். அடுத்த நான்கு ஆண்டுகளில் அவர் இயற்றிய நாடகங்கள் புகழ்மேடை நாடகங்களைவிட ஒரு சிறிதே குறைந்து. அவர் சீரிய நாடகங்களுடன் இடம் பெறக் கூடியவை. இவற்றுள் ‘ஃபாணியின் முதல் ஆட்டம்,” “ஆன்ட்ராக்ளிஸ்,’ ‘பின் மாலியன், ஆகியவை தனிப்படக் குறிக்கத்தக்கவை. ‘அடக்கப் பட்டவர்(overruled)' 'பேரரசி காதரீன்(great chatharine)' இதே காலத்தவை.