அறிவுலக மேதை பெர்னாட்சா
=
115
ஃபானியின் முதல் ஆட்டம்(fanuy's first play) 1911-ல் எழுதப்பட்டது. முந்திய நாடகங்களை எதிர்த்த பல இதழகக் கருத்துரைாளர்களைச் சாடவே இது எழுந்தது. டைம்ஸ் இதழின் கருத்துரையாளரான ஏ.பி. வாக்லி (வாக் = நட) இங்கே டிராட்டர் (ட்ராட் = ஓசைபட நட) என்றும்; நாட் செய்தி(daily news) இதழிலுள்ள ஈ.ஏ.பாகன் இங்கே வாகன் என்றும்; விண்மீன்(star) இதழிலுள்ள கில்பர்ட் கானன் (கானன் = பீரங்கி) இங்கே கன் (கன் துப்பாக்கி) என்றும் தீட்டப் பட்டுள்ளனர். வசைத்திறம் வசை நயமுடையதாகவும், இதழகத் துறையாளரின் பண்புகளை நிலையான உயிர்க் கலையோ வியமாகக் காட்டுபவையாகவும் அமைந்துள்ளன. நாடகத்தினுள் நாடகமாக ஃபானியால் நடத்தப்படும் அக்நாடகம் ஷாவுக்கு வழக்கமான உரையாடல் போராட்டத்திலீடுபடாமல், விரை கதைப் போக்குடையதாகவே அமைந்துள்ளது. மொத்தத்தில் இந்நாடகம் ஷாவின் முதல்தர வெற்றிகளுள் ஒன்று. மேடையில் இரண்டரை ஆண்டுக்காலம், கொடுத்து 600 தடவை இது ஆடப்பெறும் பெருஞ் சிறப்புப் பெற்றது.
இன்று பழமையாளர் பழமைச் சின்னமாய்விட்ட கிறித்துவ சமயம் பழமையை எதிர்த்த புதுமையாக நிலவிய காட்சியை 'அன்ட்ராக்ளிஸூம் அரிமாவும்(androcles and the lion)' என்ற அடுத்த நாடகம் வரைந்துருவாக்குகிறது. சமய உணர்ச்சியின் புத்தார்வம், உயர்வு ஆகியவைபற்றி ஷா இங்கே கூறும் கருத்து தனிச்சிறப்பு வாய்ந்தது. “நீ எதற்காகச் சாக வேண்டும்?” என்ற கேள்விக்கு இளங் கிறித்துவக் கன்னி, “எனக்குத் தெரியாது. அது தெரியத்தக்க சிறு செய்தியானால், அத்தகைய சிறு செய்திக்காக யார் சாகத் துணி வார்கள். நான் சாவது கடவுளுக்காக. சாவதற்குரிய உண்மையான தூண்டுதல் இதுவே, என்கிறான். “கடவுள் என்பது என்ன?” என்பது மற்றொரு கேள்வி. “அது தெரிந்துவிட்டால், பின் நாமே கடவுளர் ஆய்விடலாகும்.” என்பது அந்நங்கையின் விடை.
துன்ப நாடகமாகக் கருதப்படத்தக்க நிகழ்ச்சிகள் இங்கே ன்ப வசைநயத்துடனும் உயர் குறிக்கோள் பண்புகளுடனும் கலக்கப்பெற்றுள்ளன. சமயத்துறையாளர் கிறித்துபெருமான்