(116)
||– –
அப்பாத்துரையம் – 8
பிறந்தநாள் விழாவில் கொண்டாடத்தக்க சிறந்த சமய நாடக மாகவே இது காட்சியளிக்கிறது. ‘கலைத்துறையில் கிறித்தவ சமயத்தில் தொடக்கக்கால ஆர்வத்தை ஷாவின் அருட்கண் களன்றி வேறெவை காணமுடியும்? அவர் அருட்கலையன்றி வேறு எது தீட்டமுடியும்?' என்று கேட்கத் தோற்றுகிறது.
இக் கதையில் அரிமாவுக்குக்கூட மனிதப்பண்புகள் மிகப் பொருத்தமாகத் தரப்பட்டுள்ளன. காதல் வேடர் நாடகத்தில் செயலற்ற இப்ஸென் சிலைக்கே மனிதப்பண்பூட்டிய ஷா ஒரு விலங்குக்கு அப் பண்பு ஊட்டியதில் வியப்பில்லை. நாடக மேடையிலும் அரிமா உருவில் எட்வர்டு ஸில்வேர்டு என்ற ஒரு மனித நடிகரே நடிக்கவேண்டி வந்தது! பதினெட்டு நூற்றாண்டு களுக்கு முன் நிகழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு கதைக்கு ஷா உயிர் கொடுத்ததுடன் மட்டுமின்றி, அதனை இக்காலத்துக்கும் எக்காலத்துக்கும் பொருத்தமான ஒரு காலங்கடந்த ஒவியம் ஆக்கியுள்ளார்.
1911-க்கும் 1914-க்கும் இடைப்பட்டகால நாடகங்களுள் தலைசிறந்த நாடகம் அன்ட்ராக்ளிஸே.
‘அடக்கப்பட்டவர் (overruled)' பெண், ஆண்பால் திறங்களின் பண்பு வேறுபாடு பற்றிய பெண்களும் ஆண்களும் நடத்தும் ஆராய்ச்சி விளக்கமா யமைந்துள்ளது.
பிக்மாலியன் (pygmalion) 'ஒலியியல்' சீர்திருத்தக் குறிக்கோள் உடையது. இங்கிலாந்தின் மாவட்டந்தோறும் ஒலிப்பு முறை வேறுபடுகிறது. உயர்மக்கள் வாழும் மாவட்டத்தின் உயர்குடி மக்கள் ஒலிப்பு முறையே அவர்கள் குல மரபுச் சின்னமா யமைகிறது. ஒலிப்பு முறை ஆராய்ச்சியில் முனைந்த ஒரு பேராசிரியர் தம் ஆராய்ச்சித் தேர்வுமுறைகளுள் ஒன்றாக, ஒரு பூ விற்கும் பூவையைத் தேர்ந்து பயிற்றுவிக்கிறார். ஒலிப்பு முறையுடன் உயர்குடி வாழ்க்கைப் பழக்க முறையும் பயிற்று விக்கப்படுவது உண்மையிலேயே நகைச்சுவை யூட்டும் காட்சி களைத் தருகின்றது. ஆனால், திருத்தப்பெற்ற நங்கை தன்னைப் புதிதாய்ப் படைத்த ஆசானிடம் தன் படைப்புரிமைகளைக் கோருகிறாள்! அஃதாவது, படைத்தவனே வழிவகுத்து விடவேண்டும் என்கிறாள்.