அறிவுலக மேதை பெர்னாட்சா
(117
ஆசிரியரின் இல்லத்தலைவி நங்கையைத் திருத்தும் பணி யில் ஈடுபடும்போது கீழ்குடி, மேல்குடி வாழ்வுபற்றி ஒப்பிடும் ஒப்புமை சுவைமிக்கது. இயற்கையோடொட்டிய சாக்கடை வாழ்வே செயற்கையான உயர்குடி வாழ்விலும் சிறந்ததென அவள் கட்டுரைக்கிறாள்.
"உன் வாழ்க்கை முறையில் (குளிப்பதால்) உடலுக்குக் குளிர் வரப்பெற்று அதை நீ தாங்கமுடியாததானால், மீண்டும் உன் சாக்கடைக்கே போ! ஓயாது வேலைசெய்து, மனிதப் பண்பிழந்து, விலங்காகும்வரை வேலைசெய்து, அதன்பின் அடித்துக் குடித்து அடங்கிக்கிட! ஓ, இச் சாக்கடை வாழ்வுதான் எத்தகைய சீரிய வாழ்வு! அது பொய் வாழ்வு அன்று; உணர்ச்சி யார்வமிக்க வாழ்வு; விரைதுடிப்புடைய வாழ்வு. மரத்துப் போன தோல்வழியாகக்கூட அதன் விறுவிறுப்பை உணரலாம். மிகுதி பயிற்சியோ, உழைப்போ இல்லாமல் இதனைத் துய்க்க, சுவைக்க, நுகரமுடியுமே! அறிவியல், இலக்கியம், பழமரபின் இன்னிசை, மெய்ந்நூல், கலை ஆகியவற்றைப்போலல்ல அது!”
'பிக்மாலியன்' என்பது, ஷாவின் தலைசிறந்த முதல்தர நாடகங்களுள் ஒன்று. இதுவே, 'வெஸ்ம் என்ட்' மேடையை
நிலவரமாக ஷாவுக்கு உரிமையாக்கித் தந்தது. தம் நாடகங்களுக்காக உயர்தர மேடையையோ, நடிகரையோ ஷா இதன்பின் தாங்கவேண்டி வந்ததுமில்லை - தாங்கியதுமில்லை. இதுமுதல் அவர் கலை நோக்கன்றி வேறு எந்நோக்கமுமற்று நாடகங்கள் எழுதலானார்.
பேரரசி காதரின்(great catharine) உண்மையில் ஷாவின் கனவார்வத் தால் படைத்துருவாக்கப்பட்ட ஒரு புத்துலக அரசியே யாவர். அமைச்சர்கள் ஆதரவால் நடத்தப்பட்டு முறிவுற்ற 'மார்க்கோனி கழகத்தை’த் தாக்குவது.
நாடக உலகில் ஷா முன்னேறிப் புகழ்பெற்ற அதே காலத்தில், அரசியல் உலகில் அவர் முந்திய நூற்றாண்டில் கலந்து கொண்டிருந்த இயக்கங்களிலிருந்து படிப்படியாக விலகினார். 1903-ல் ஸெண்ட் பாங்கிராஸ் வட்டத்திலிருந்து அவர் விலகியபின் அதே வட்டச் சார்பில் அடுத்த ஆண்டு லண்டன் மாவட் மன்றத்திற்கு அவர் தேர்தலில் நின்றார். இதில் அவர் வெற்றி