பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுலக மேதை பெர்னாட்சா

123

சமயத்தை நாம் கீழ்நாடுகளிலிருந்து பெற்றதனால் ஏற்பட்ட விளைவு இது. மேல்நாட்டவர் உணர்ச்சியடிப்படையாக, மேல் நாட்டவர் அறிவுத் தூண்டு தலின்படி நமக்கென நாம் ஒரு சமயம் வகுத்துக்கொண்டிருக்கவேண்டும். இங்ஙனம் செய்யாததனா லேயே நம் சமயவாழ்வு அதன் வாழ்க்கையிறுதி யடைந்து விட்ட தென்று நாம் கருதுகிறோம். உண்மையில் நம் சமயம் இன்னும் பிறக்கவில்லை. அது இன்னும் கருவிலேயே இருக்கிறது!”

1911-ல் ஷா கேம்பிரிட்ஜ் ‘சமய எதிர்ப்பாளர்' கழகத்தில் சொற்பொழிவாற்றினார். “மன உறுதி, பிடி முரண்டு ஆகிய இரண்டும் ஒரே பண்புகுறித்த இரண்டு சொற்களே. முன்னது நம்பு முறையில் மக்கள் கூறுவது; பின்னது பகைமையுட் கொண்டவர் கூறுவது.” இவ்வரிய மெய்ம்மை விளக்கத்தை அவர் முதல்முதல் கூறியது இங்கேயே. மேலும், "ஆடவர், பெண்டிர் பொதுவாக, மிக உயர்குடி மரபிடையேகூட இன்ப வாழ்வுடைய வராயில்லை,” என்றும், “இன்றைய சமய வாழ்வு அவ்வகையில் போதியதாக இல்லை,” என்றும், "ஒரு புதுச் சமயம் ஏற்பட்டாக வேண்டு,"மென்றும் அவர் பேசினார்.

அடுத்த ஆண்டு மார்ச் 21-ல் புதிய சீர்திருத்தக் கூட்டுக் குழுவில்(new reform club) ஷா 'தற்கால சமயம்,' எனும் பொருள் பற்றிப்பேசினார். கடவுட் கருத்துத் தோன்றிய வகையையும், சமயம் பற்றிய தம் மனிதவாழ்வு கடந்த உயிர் உணர்ச்சி நிலைக்கோட்பாட்டையும் இதில் அவர் விளக்கியுள்ளார்.

1912-ல் 'ஜான்புல்லின் மற்றத்தீவு' அயர்லாந்துத் தன்னாட்சிக் கிளர்ச்சிக்காதரவாக மீண்டும் பதிப்பிக்கப் பெற்றபோது, ஷா அதற்கு எழுதிய முன்னுரையில் அவர் உலக ஒற்றுமைக்கான தம் கோட்பாட்டை விளக்கினார். இதுவே பிற்காலங்களில் ஜெனிவா உலகச் சங்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் வழிகாட்டியான குறிக்கோள் ஆகும்.

"நம் எதிர்காலம் அடிமை நாடுகள் அடங்கிய பேரரசு வழிச்சார்ந்த தன்று; தன்னுரிமை யாட்சியுடைய நாடுகள் அடங்கிய கூட்டுறவு வழிச்சார்ந்தது. ஒவ்வொரு நாட்டிலும் உலக அடிப்படையில் எல்லா நாட்டினருக்கும் நுழைவுரிமை, வெளிச்செல்லும் உரிமை; பாதைகள், காவலர், அஞ்சல்துறை