அறிவுலக மேதை பெர்னாட்சா
131
நிலையை உண்டு பண்ணிற்றென்னலாம். இதன் வருங்கால நோக்கின் திறனைக் கீழ்வரும் வாசகங்களால் காணலாம்.
"அடுத்த போர் என்ற ஒன்று நடக்கும்படி விட்டோமே யானால், அந்தப் போர் வெறும் ‘மன்னர்விளையாட்'டாயிராது. உயிரற்ற பகடைகளுக்கு மாறாக உயிருள்ள மனிதப் பகடைகளை வைத்து ஆடப்பெற்று, அவற்றை உயிரற்ற பகடைகளாக்குவதன் மூலமே வெற்றிபெறும் சூதாட்டமாகக்கூட அது இராது. அது போரிலீடுபடாத மக்களையும் முழு நகரங்களையும் அழிக்கும் அறிவுத் திறமை மிக்க முயற்சியாயிருக்கும். படைவீரர் மட்டு மல்ல, நாம் அனைவருமே நிலத்திலகழ்ந்த வளைகளுக்குள் சென்ற எலி பெருச்சாளி வாழ்க்கை வாழவேண்டியிருக்கும்.”
து தவிர, ஜெனீவா உலக சங்கம் ஏற்படும்போதே, அதன் எதிர்கால இடையூறுகளை அவர் விளக்கியுள்ளார். ஐரோப்பா வின் உட்பூசல்கள் அமெரிக்காவையும் தாக்கித் தீருமென்றும், அவற்றைத் தலைவர் வில்ஸன் தீர்க்கமுடியா விட்டால் அடுத்த போரைத் தடுக்க முடியாதென்றும் கூறியுள்ளார். மேலும், உலகை ஒன்றுபடுத்துமுன் ஐரோப்பாவை ஒன்றுபடுத்தவேண்டு மென்றும், கீழ்த்திசை நாடுகளை முதலிலேயே சேர்ப்பது பயன் தராதென்றும் குறிப்பிட்டுள்ளார். “அரசியல் துறையில் மனித இனக்குழு கட்டவிழ்ந்து மாறுபட்டு வருகிறது. அதனை ஒரே கட்டுக் கோப்புள்அடக்க இன்னும் நீண்டகாலம் பிடிக்கும்..... வரம்புகடந்த எல்லை, வலிமையும் தரும்; மிகுந்த தொல்லை களையும் இடையூறுகளையும் அத்துடன்கூட உண்டுபண்ணும்.” சீனா, ஜப்பான் ஆகியவற்றால் ஜெனீவாவில் கூட்டமைதி முதலில் முறிவுற்றது என்பதை நாம் அறிவோம். ஷா இதனை முன்கூட்டி அறிந்து கூறினார்.
"நாம் கொன்ற ஒவ்வொரு ஜெர்மானியனும், நாம் உறுப்பிழக்கச்செய்த ஒவ்வொரு ஜெர்மானியனும், ஜெர்மன் குழந்தையும், அந்த ஜெர்மானியர் பிரிட்டனிலும் நேச நாட்டிலும் கொன்ற நம்மவர் போலவே நாமிழந்த செல்வங்களாவர்.” ஷாவின் தொலைநோக்குக்குக், அருள் நோக்குக்கும் இவ்வுரை ஒரு நற்சான்று.
பொதுவாகப் போர்பற்றி ஷா கூறும் கூற்றுக் கூட அவர் நுண்ணறிவைக் காட்டுகிறது. போரை வெறுக்க வேண்டுமானால்