இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
||--
(134) ||-
அப்பாத்துரையம் – 8
நம்பிக்கை உறுதியைச் சிறிது அலைத்திருக்க வேண்டும் என்று நாம் கருத இடமுண்டு. ஏனெனில் “மனமுறிவு மாளிகை”யில் நாம் ம்மனவுலைவின் சின்னத்தையே காண்கிறோம். இந்நாடகம் ரஷ்ய ஆசிரியர் செக்காவின் மெல்லிய சிலந்தி நூல் வலைபோன்ற தொய்வும் விரிவுமுடைய கலைப்பண்புடன் தொகுக்கப்பட்டுள்ளது. 1915-ல் அவர் இல்லமாகிய “அயாட் ஸென்ட்லாரன்" ஸினருகே விழுந்த ஒரு ஜெர்மன்குண்டின் நினைவுத் தூண்டுதலாய், கதை ஒரு குண்டு வீழ்ச்சியுடன் முடிவுறுகிறது.