அறிவுலக மேதை பெர்னாட்சா
137
வெற்றிகண்டார். இவ் வாதாட்டத்தில் அவர் தம் அருள் முடிவுக்கு எத்தனை செயலுலக நிகழ்ச்சிகளின் படிப்பினைகளை எடுத்துக்காட்டுகிறார் என்று காண்டல் வேண்டும்.
“இச்சிறு தவறைத் திருத்த நான் முயலும்போது பலர் எனக்கு மருத்துவர்மீது ஏதோ பகைமை இருப்பதுபோலசும், ஸர் ஹெர்பர்ட் பார்க்கர் பதிவுபெற்றிருந்தால் எல்லாருமே பதிவு பெற்றுவிடுவது போலவும் பேசுகின்றனர். ஒருவர் பதிவினால் யாவரும் பதிவுபெறுவர் என்பது, இசைப் பயிற்றியில்லாமலே பிராம்ஸூக்கு இசைப்பேராசிரியர் பட்டம் கிடைத்ததால் தெருப்பாடகர் ஒவ்வொருவருக்கும் அது கிடைத்துவிடும் என்பதுபோன்றதே. பல்கலைக்கழகங்கள் அவ்வண்ணம்செய்ய மாட்டா. ஒருவருக்குத் தனிப்படச் செய்வதால் எல்லாருக்கும் செய்யவேண்டுமென்ற கட்டாயமுமில்லை. மேலும் மருத்து வரிடையே எனக்கு இருக்கும் அத்தனை சிறந்த நண்பர்கள் வேறு யாருக்கும் இருக்க முடியாது.மருத்துவரைப்பற்றிய என் நூல்கள் அவ்வளவு வாய்மைத் திறம் உடையனவாய் இருப்பது அதனா லேயே. மருத்துவர் என்ற முறையில் அந் நண்பர்களால் பேச முடியாத அடங்கிய உள்அவா ஆர்வங்களையே நான் வெளியிட்டுக் கூறுகிறேன். காரணம் அவர்களைப்போல் வாய்திறப்ப தனால் என் வாழ்க்கையை நான் அழித்துக் கொள்ளவோ, என் பெயரை இகழுக்கிரையாக்கிக்கொள்ளவோ போவதில்லை. அவர்களுக் கில்லாத விடுதலை உரிமை எனக்குண்டு. வாயற்ற இவ்வாழ்க்கைக் குழுவுக்கு நான் வாயாய் உதவுகிறேன்.”
ஷா தமக்குரியதாகக் கூறும் மருத்துவ உலகு பற்றிய அறிவு வெறும் வீம்புரையல்ல. மருத்துவர் இருதலை மணியம், அதனை நன்கு விளக்கிக் காட்டுகிறது. 1918-ல் அவர் 'மருத்துவர் மயக்கங்கள்' என்று மற்றும் ஒரு நூல் எழுதினார். ஷாவின் கேலியும் வசையும் இறுமாப்பும் கலந்த வழக்கமான தொனியும் தலைப்புமே அவர் நூல்களின் உண்மை அறிவுத்துறை மதிப்பை மறைக்கின்றன.மேலும் அவர் அறிவுத்துறையாளர் துறைச் சொல் நடையை வழங்காமல் மக்கள்மொழியில் நேரிடையாக மக்களுக்கே அறிவுதரும் வழக்கமுடையவர். இதுவும் அறிவுத் துறையாளரின் இறுமாப்பைப் புண்படுத்திற்று. இத்தடைகளை