138
||– –
அப்பாத்துரையம் – 8
அகற்றி அவர் நூல்களை அறிவுத்துறையினரிடையே உலவவிடக் கூடுமானால், அவை அறிவுத்துறையிலும் நிறைந்த செயலறிவுத் தூண்டுதலுக்குரிய சீர்திருத்த உரைகளாக இயலத்தக்கன.
ஷாவின் வாழ்விலும், கருத்துரைகளிலும் காணும் இம் முதிர்ச்சிக்கனிவை அவர் பிற்கால நாடகங்களில் இன்னும் சிறக்கக் காணலாம். 1918 முதல் 1920 வரை அவர் பெருமுயற்சி யுடன் விரைந்தெழுதி முடித்த “மீண்டும் மெத்துஸலே நோக்கி” (Back to methusaleh) என்னும் நாடகக்கோவை இதனை மலைமிசை மதியமென வளமுற விளக்குகிறது. இக்கோவை ஒரு தனி நாடகமன்று; ஒரே பொருள்பற்றித் தொடரும் ஐந்து பெரிய நாடகங்களே. இது விவிலிய நூலில் கூறப்பட்ட உலக வரலாற்றை ஒரு நாடகமாக்கிக் காட்டுகிறது. ஆனால், ஷாவின் ஆழ்ந்த ஆராய்ச்சிப் பண்பு விவிலிய நூலிற் குறிக்கப்பட்ட படைப்புக் காலத்திலிருந்து இன்றுவரையிலுள்ள 4000 ஆண்டு வாழ்க்கை யையும் புதிதாகப் படம் பிடித்ததுடன் நில்லாது, கி.பி.31,920 வரை தன் கனவியல் திறத்தைக்காட்டிப் புத்துலகு படைத்துள்ளது!
பு
தொல் முதல் காலம்(in the beginning) கி. மு. 4004; பார்னபாஸ் உடன் பிறந்தார் வரலாறு (Gospel of the brothers Barnabas) கி.மு.1920 வரை; சேதி நடைபெறுகிறது(The thing happens). கி.பி. 2170; முதிய நன்மகன் துயர் முடிவு(Tragedy of an elderly gentleman) கி.பி.3000; கருத்தெல்லை யின் வெளிவரம்பு(As far as thought can reach) கி. பி. 31,920.
அரசியலாரிடம் நாடகங்கள் ஒவ்வொன்றையும் பதிவு செய்யும்போது நாடகம் ஒவ்வொன்றுக்கும் பதிவு கட்டணம் செலுத்தவேண்டும். ஷா இந் நாடகக்கோவையை எட்டு நீண்ட காட்சிகளாக்கி ஒரே நாடகமாக பதிவு செய்ய நாடினாராம்! ஆனால், மன்னவைச் செயலாளர்(Lord Chamberlain) அதனை ஐந்து நாடகங் களாகவே பதிவு செய்து கட்டணம் கணித்ததாக அறிகிறோம்!
ஊழ்கண்ட மனிதரில் நாடகத்தின் கலைத்தத்துவமாக அவர் வாழ்க்கைக் கோட்பாடு கருவுற்றது. ஸீஸரும் கிளியோப் பாத்ராவிலும், மனிதனும் மீமிசை மனிதனிலும் அது கலையின் அடிப்படையாயிற்று. ஆனால், ‘மெத்து ஸலே நோக்கி' என்னும் இந்நாடகக் கோவையில் அவர் வாழ்க்கைக் கோட்பாடு கலை