அறிவுலக மேதை பெர்னாட்சா
(141
ரொபிட்ஸ். அவர் இயற்றிய நாடகமொன்றின் ஆங்கிலத் தழுவல் பொழிபெயர்ப்பே இந்நாடகம்
'மெதுஸலே நோக்கி' என்ற கோவையே ஷாவின் வாழ்க்கைத் தத்துவங்களை உணர்பவருக்கு நாடகத் துறையில் கிட்டும் உச்சக் கலைமுகடு என்னலாம். ஆனால் கலைக்கோப்பு, பண்போவியச் சிறப்பு,ஷாவின் அருளாண்மையின் புறப்பொறிப்பு ஆகியவைக்களிலும் அவருக்குத் தனிப் பெருஞ் சிறப்புத் தரும் நாடகம் ‘அருள் திரு. ஜோன்'(St. Joan) ஒன்றே ஆகும். அவருட னொத்த வயதினரான பிற பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கலைஞர்களனைவரும், பிரிட்டனிலும் பிறநாட்டிலும் ஒவ்வொரு வராக 1924-க்குள் இறந்துவிட்டனர். பழைய நூற்றாண்டின் எஞ்சிய மிச்சமாக நின்ற ஷா, இப்போதும் தம்வாழ்க்கை யுயிர்ப் பிழவாமல் ஒரு புது மலர்ச்சி எய்தி, தம் தலைமைப் படைப்பாக ஒரு நாடகத்தை இயற்றியது மிகவும் வியப்பும், இறும்பூதும் தரும் செய்தியேயாகும்.
ஜோன் 16-ம் நூற்றாண்டில் ஃபிரான்சின் தனிப் படைத் தலைவராய் நின்று, பிரிட்டனை வென்ற ஃபிரஞ்சு நாட்டு இளநங்கை. அவள் நாட்டினரே அவள் அருமை யறியாமல் அவளைக் காட்டிக்கொடுத்தனர். அவள் எதிரிகளான பிரிட்டிஷ் காரர் அவளைச் "சூனியக்காரி, கடவுளை மறுத்தபேய்மகன் கையாள்” எனக்குற்றஞ்சாட்டி எரித்து விட்டனர். அவள் வீரப் பெண்மணியா, தெய்வ அருள் பெற்றவளா, அல்லது மாயக் காரிதானா என்ற கேள்விகள் உலகில் 500 ஆண்டுகளாகப் பலவாறாகக் கேட்கப்பட்டு. எவராலும் முடிவுபடுத்தப் படாமலே இருந்தன. 1920-ல் ஜோன் எரியுண்டதற்கு 489 ஆண்டுகட்குப் பின்னர். அவளை எரித்த கத்தோலிக்கத் திருக்கோயிலகத்தாரே அவளைத் தெய்வ அருள்பெற்ற திருவருள் தொண்டருள் ஒருவராக ஏற்றனர்.
ய
ஷா ‘மீமிசை மனிதர்' வாழ்வில் மிகுதி அக்கரை கொண்டவர். அவர் தேடிய பண்புகள் நெப்போலியன், ஸீஸர் ஆகியோரிடம் காணப்பெற்றன. அவர்களை அவர் சித்திரித்துக் காட்டினார். ஆனால், தம் முழுப்படமாக ஒரு பெருவாழ்வை அவர் நாடியவண்ணமிருந்தார். இவ்வகையில் கிராம்வெல், முகம்மது ஆகியவர்கள் அவர் மனக்கண் முன் நடமாடினராம்!