அறிவுலக மேதை பெர்னாட்சா
143
படைப்புக்கண்டு அதிர்ச்சியுற்றிருப்பார் என்பதில் ஐயமில்லை. உண்மையில் ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வரும் இதே ஜோன் அவர் இளமைக் கால முதிராப்படைப்பாயிராவிடில்,
நாம்
ஷேக்ஸ்பியரின் ஜோனுடன் ஷாவின் ஜோனை ஒப்பிட்டுக் காணும் நிலையிலேயே இருந்திருக்கக் கூடும்.
ஷா ஓர் அறிஞரா, கலைஞரா என்பதற்கு இந் நாடகமே இறுதியான மறுமொழி தரப்போதியது.அவர் அறிஞர். கலையில் அவர் அறிவு அடிக்கடி தலையிட்டது. பல தடவை கலையை அது ஆட்கொண்டது. ஆனால், அவர் அறிவிலும் அவர் கலை சிறப்புக் குறைந்ததன்று.ஜோனில் கலப்பற்ற அவர் தூய கலைத் திறத்தைக் காண்கிறோம். இத்தகைய தூய கலைப்படைப்புக் களை அவர் இன்னும் படைத் திருந்தால், அறிவுக் கலைஞராக ஷேக்ஸ்பிய ருடன் ஒத்த இடம் பெறுவதுடன், மற்றொரு புதிய ஷேக்ஸ்பிய ராகக் கூட விளங்கியிருக்கக்கூடும்!
ஷா ஆசிரியர் கூற்றாக எதுவும் கூறாமல், புதிய உறுப்பினராக எவரையும் மிகுதி உருவாக்காமல், ஜோனை உலக முள்ளளவும் மறவாத ஓர் ஒப்பற்ற தெய்விக நங்கையாக்கியுள்ளார். ஷாவின் கையில் ஜோனின் தனிச் சிறப்புக்குக் காரணம் உண்டு. அவர் ஒரே வீச்சில் ஜோனை மூன்று குறிக்கோள்கள் வந்து ஒன்றுபடும் நிலையில் படைத்துள்ளார். அவள் புராட்டஸ்டண்டு சமயத்தின் எதிர்ப்புக்காளாக மாண்ட முதல் திருவீரர்; நாட்டுரிமை யுணர்ச்சியின் முதல் தெய்விக உரு; போர்த் துறையில் இயற்கையறிவின் தூண்டுதலால் நேரடி நடைமுறை கண்ட முதல் படைத்தலைவர். முன் எவராலும் முற்றிலும் புரிந்து கொள்ள முடியாது, எல்லாரையும் மலைக்கவைத்திருந்த ஜோனின் வியத்தகுவெற்றி ஷாவின் இம் முத்திற விளக்கத்தால் இயற்கைத்தன்மையடைகின்றது. ஆயினும், அதன் முத்திறக்கூறே அதன் தனியுயர் சிறப்பையும், மனித உணர்ச்சி சென்றெட்ட முடியாத அதன் உயர் அருமைப் பாட்டையும் எடுத்துக் காட்டுகிறது.
வரலாற்றுச் சார்பான நாடகங்கள். எழுதியவர் பலர். ஷேக்ஸ்பியர் பல வரலாற்று நாடகங்கள் எழுதியுள்ளார். ஆயினும் உண்மையிலேயே வரலாற்றுக்கு வரலாறாகவும், கலைக்குக் கலையாகவும் உள்ள முதல்வரலாற்றுக் கலைப்