பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

||– –

அப்பாத்துரையம் – 8

படைப்பும் அத் துறையில் முனைபவருக்கு மூலமுன்மாதிரியும் ஆக விளங்கத்தக்கது ‘அருள் திரு ஜோனே'

ஷாவின் வாழ்க்கைநிறைவை நிழற்படுத்திக் காட்டுவது 'அருள் திரு ஜோன்.'

புகழ்மேடை, வெஸ்ட்என்ட் போன்ற சிறப்புயர் மேடைகள் இப்போது அவர் ஆணையிற்கிடந்தன. முன் அவர் நாடகங்களை நடிக்க மறுத்த நடிகர் நடிகையர், அவர் அறிவுரை கேட்டு நடிக்க மறுத்தவர், இப்போது அதற்காகக் காத்துக்கிடந்தனர்.ஜோனாக நடித்தஸிபில் தார்ன்டைக் அவர் நாடகத்தை என்றும் மறவாதவர்; அவர் புகழே தம் புகழாகக்கொண்டு, அவர் ஜோன் நாடகத்தை அவரே வாசிக்கக் கேட்டு, ஜோனாகத் தன்னைப் பயிற்றுவித்துக் கொண்டவர்.இந்நாடகத்தை ஷாவின் கலையன்பர் மட்டு மன்றிக் கலையுலகும் அறிவுலகும் சமயத்துறையாளரும் கூட, மாறுபாடும் தயக்கமுமின்றித் தலைமேற்கொண்டு கொண்டாடினர்.

ஜோனைப்போன்ற தூய சமய வீரரை உண்டுபண்ணும் அவர் அருளாளராகவே இருக்கமுடியும்; சமயப் பகைவராக, சமூகப்பகைவராக இருக்கமுடியாது என்ற உறுதி கனவுப் பண்பற்ற பிரிட்டானியர் உள்ளத்திற்கூடப் பதிந்துவிட்டது! மெய்மையை எளிதில் நம்பாத, உணராத 'திண்தோல் வீரர்’ என்று கூறப்படுபவர் பிரிட்டானியர். ஆனால், இத்தகையோர் நம்பியபின், கண்டபின் மாறாத, உலையாத உறுதியுடையவர் ஆவது இயல்பு. ஷாவும் பல எதிர்ப்புப்புயல் கடந்து தம் பண்பை நிலைநாட்டியபின், ஆங்கிலேயரால் ஆங்கிலாநாட்டி 'நற்பண்புத் திருவுரு'வாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

.

ஜோன் வாழ்வில் வரும் அருஞ்செயல்களை ஷா சமய உணர்ச்சியாளரையும் புண்படுத்தாது, கலைப்பண்புக்கும் அறிவுப் பண்புக்கும் முரண்படாமல் தீட்டும் திறன் வியப்புக்குரியது. அருஞ் செயல் என்பது நம்பிக்கையார்வம்(Faith) ஊட்டும் ஒரு செயல் என்பது அவர் நடுநிலை விளக்கம். இதனை நாடகத்தி னிடையே ஜோனின் மறுமொழியால் அவர் நன்கு விளக்குகிறார். ஊர்ப்புற வெளியில் ஜோன் கேட்ட தெய்வக் குரல்கள் அவளுடைய கருத்துப் புனைவுகளாக இருக்கக்கூடாதா என்று கேட்கப் படுகின்றது. ஜோன், “ஆம், தெய்வத் திருச்செய்திகள்