பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

|| - -

அப்பாத்துரையம் - 8

ஷாவின் அடுத்த முக்கிய நூல் நாடகமன்று: ஒரு நீண்ட கதை. ‘கடவுளை நாடிய கறுப்புநிற நங்கையின் வாழ்க்கை நிகழ்ச்சிகள்’(History of a black girl in her search for God) என்பது அதன் தலைப்பு. இது 1932-இல் இயற்றப் பெற்றது. நாகரிகத்தின் பழக்கவழக்கத் தோடுகளிற் கட்டுப்படாத பண்படாக் கன்னியுள்ள மொன்றில், கடவுள் பற்றி, சிறப்பாகக் கிறித்தவ சமயக் கடவுட் கருத்துப்பற்றி எழும் வளர்ச்சி தளர்ச்சி களை ஷா இதில் உருவாக்கிக் காட்டுகிறார். கிறித்தவ சமயம் பற்றிய வரலாற்றுப் பின்னணி யறிவில்லாதமக்களிடையே அவ் வறிவால் ஏற்படும் எதிர்பாரா விளைவுகள் இந்நாடக நிகழ்ச்சிகள் ஆகின்றன. விவிலிய நூலிலேயே காணப்படும் பலவகைக் கடவுட் கருத்துக்களும் பிரித்து ஒப்புமைப்படுத்தியும், வேறு படுத்தியும் காட்டப்பெறுகின்றன. உயிரினங்களைக் கொடுமைப் படுத்தும் செயலுடையோர் பற்றி வாதம் எழுப்பப்படுகிறது. கடவுட் படைப்பிலேயே கொடுமையும் உயிர்க்கொலையும் இடம் பெறுவானேன் என்ற வினாவை ஷா எழுப்பியுள்ளார். அவர் கூறும் விளக்கம் 'கடவுள் முழுதும் நல்லவரானால்' நல்லன வல்லாதவற்றைப் படைத்திருக்கமாட்டார்; முழுதும் வல்லவ ரானால் அவற்றைப்படைத்த அவர் நல்லவராயிருக்க முடியாது என்பதே. ஷா முதல் விளக்கத்தை ஏற்றுக் கடவுள் நல்லவர்; ஆனால், முழுதும் வல்லவரல்லர் என்று நாடக உறுப்பினரைக் குறிக்கச் செய்கிறார். (நன்மை தீமைகள் அவரவர் வினைப் பயன்கள் என்ற கீழ்நாட்டவர் கோட்பாடு இங்கே கவனிக்கப்பட வில்லை.)

வரலாற்றுப் பின்னணி இல்லாமல் இயேசுவின் வாழ்க்கை பற்றிய போதனை கறுப்பு நங்கயிைன் உள்ளத்தில் அவரை ஒரு சூனியக்காரராகவே தோற்றும்படி செய்கிறது. அருஞ்செயல் களின் நோக்கம் வற்புறுத்தப் பெறாததால், வரும் விளைவு இது என்பது ஷாவின் கருத்து. அவற்றின் நோக்கம் கடவுளின் ஆற்றலைக் காட்டுவதல்ல, அவர் நல் அருள் பண்பைக் குறிப்பது என்பது அவர் முடிவு. காந்தியடிகள், டால்ஸ்டாய் போன்ற அருளாளர்கள் முடிவும் இதுவே. “தீமையிடையே, நற்பலன் எதிர்பாராமல், தாயும், நல்லாரும், நண்பரும், காதலரும் செயலாற்றுதல் காண்கிறோம். இதுவே அருட்பண்புடைய கடவுளின் உண்மைக்கு சீரிய நற்சான்று," என்பதே காந்தியடிகள் கடவள்பற்றிய ஒலிப்பதிவின் குறிப்பு என்பது காண்க.