அறிவுலக மேதை பெர்னாட்சா
(149
கிறித்தவ சமயத் தலைவரும் அவர்கள் சார்பான இதழக உலகும் இந்நூலை மும்முரமாகத் தாக்கின. எதிரிகளை அணைக்கும் கிறித்தவப்பண்பு அவர்களிடம் இல்லையென ஷா இறு மாப்புடன் அவர்களைக் கண்டு நகையாடினர்!
'கிறித்தவ உலகு' என்ற ஒரு இதழ் மட்டும் ஷாவின் தாக்குதல் உண்மைச் சமயத்தின் மீதன்று, சமயத் துறைவரின் போலிச் சமய மரபின்மீதே என்பதை ஒத்துக்கொண்டுள்ளது. ஷாவின் தாக்குதல் ஒரு நல்ல சமயச் சீர்திருத்தமே, சமய எதிர்ப் பன்று என்பது அதன் கருத்து.
1932 இறுதியில் ஷா உலகச் சுற்றுப்பயணம் செய்து அதனிடையே அமெரிக்காவில் அமெரிக்க அரசியல் துறைக் கழகத்தில் அமெரிக்க, உலக அரசியல் பொருளியல் கோட்பாடு களைப்பற்றிச் சொற்பொழிவாற்றினார். இச் சொற் பொழிவு ஒரு முன்னுரையுடன் ‘அமெரிக்காவிலும் அணிமைத் தாயகத்திலும் உள்ள அரசியல் பித்தர் விடுதி,'(The political madhouse in America & nearer home) என்ற பெயருடன் நூலாக வெளியிடப்பெற்றது. தனி மனிதன் கட்டுப்பாடற்ற விடுதலை, நாணய அடிப்படையான செல்வத்தில் நம்பிக்கை, விலையு யர்வில் நம்பிக்கை ஆகியவற்றை அவர் தாக்கினார்.
1929-க்கும் 1939-க்கும் இடையில் ஷா முன் கூறிய மூன்று நாடகங்கள் நீங்கலாக வேறும் பத்துநாடகங்கள் எழுதினார்.1933-ல் "சிற்றூர்க் காதல்(village wooing),' 'பாறைகள் மீதில்(on the rocks),' 'ஓர் உரையாடல்(An untitled dialogue)' ஆசியவையும், 1934-ல் எதிர்பாராத் தீவுகளிலுள்ள அப்பாவி (simpleton of the unexpected isles), கலேசார்ந்த அறுவர்(six of calais) ஆகியவையும், 1935-ல் கோடியஞ் செல்வியும்(millionairess), 1936-ல் மன்னர், மன்னரசியல், மாதினி யாரும்(King, constitution & the lady), 1937-ல் திருத்தப்பெற்ற ஸிம்பலினும், 1938-இல் ஜெனிவாவும், 1939-ல் நல்வேந்தன் சார்லஸின் பொன்னாட்களில் (in good King Charles' golden days) என்பதும் இயற்றப்பெற்றன.
சிற்றூர்க் காதல் கடலில் பயணம்செய்கையில் எழுதிய ஓய்வுநேர நினைவுகளின் தொகுதி. 'பாறைகளின் மீது,' ஐரோப்பாவில் வல்லாளகண்டர்களான ஹிட்லர், முஸ்ஸோலினி ஆகியவர்கள் வளர்ச்சி கண்டு அவர் பிரிட்டனின் அரசியல்