(152) ||- ||– –
அப்பாத்துரையம் – 8
முதுமையில் அவர் பிறந்த நகராகிய டப்ளின் நகராட்சி மன்றம் அவர் பெருமையை இதுகாறும் மதித்துணராததற்கு வருந்திற்று. காலங் கடந்தேனும் அவருக்கு அந்நகர் உரிமை வழங்கிப் பாராட்ட விரும்பிற்று. ஆனால் ஷாவின் தளர்ந்த முதுமை அதற்கு இடந்தரவில்லை. ஆயினும், அந்நகரின் ஆட்பேர்க்குழு ஒன்று, 1946-ல் இலண்டனில் அவரைக் கண்டு அவ்வுரிமையை வழங்கிற்று. இதே ஆண்டில் ஸென்ட் பாங்கி ராஸ்வட்டமும் அவருக்குத் தன் உரிமை வழங்கிற்று. 1948-ல் இலண்டனிலுள்ள அயர்லாந்துக்காரர் சங்கம், அவருக்கு வாழ்த்துரை வழங்க முன்வந்தது. ஆனால், அவர் அதற்கு விடையாக, “நல்ல அயர்லாந்துக்காரர் பிறநாடுகளில் தனித்து வாழாமல், அந்நாட்டினருடன் ஒன்றுபட்டு அந்நாட்டினராகவே வாழ்தல் சிறப்புடையது,” என அறிவுரை தந்தார்.
ஷாவின் இறுதிப் பத்தாண்டுகளில் அவர் உலகெங்கும் பிரிட்டனின் மிகப்பழைய, ஆனால் மிக இளமையுணர்ச்சி கெடாத அறிஞராகப் பாராட்டப் பெற்றார்.1946-ல் அவர் 90-வது ஆ ண்டுவிழா அவர் விருப்பத்திற் கெதிராக நண்பரால் கொண்டாடப்பட்டது. அத்துடன் பிரிட்டிஷ் வானொலி நிலையமும் அதன் சிறப்புரையாக அவரைப் பேசும்படிஅழைத்தது. 'நாட்டு ஏடுகள் கழகம்' ஷாவின் நூல் தொகுதிக் கண்காட்சி நடத்தியதும், ஆக்ஸ்ட்போர்டு பல்கலைக் கழகம் தன் உலக இலக்கிய வரிசையில் மெத்துஸலேயை உளப்படுத்தியதும் இவ்வாண்டிலேயே. அடுத்த ஆண்டு வானொலி நிலையத்தார் ஷாவின் நினைவுநாள் விழாக் கொண்டாடினர்.அதில் அவருடைய 'மருத்துவர் இருதலை மணியம்' ஆண்டின் ஓர் சிறந்த ஒலிபரப்பென முடிவு கூறப்பட்டது. யுகோஸ்லாவியாவில் பிரேக்நகரில் நடைபெற்ற நூலாசிரியர் கூட்டுறவு மாநாட்டிற்கு அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.
1950 ஜூலை 26-ல் முறைப்படி ஷாவின் 94-ம் ஆண்டுப் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது ஷா, "என் பிறந்த நாளை நினைவூட்டுவது எனக்கு வெறுப்பைத் தருவ தாகும்.
னைவூட்டுபவர்களையும் நான் என் பகைவர்களாகவே கருதத்தகும்,” என்றாராம். ஆனால் இப்பிறந்த நாளே அவர் இறுதிப் பிறந்தநாள் கொண்டாட்டமாயமைந்தது. பிறந்தநாட்