அறிவுலக மேதை பெர்னாட்சா
(155
வெள்ளைய நண்பர் ஒருவர் அவருடன் பலகால் பழகிப் பயின்று பாராட்டுப் பெற்றும், தாம் விரும்பிய கையொப்பம் பெற முடியாது போயினராம். இச் சிறு மரபுகளை வெறுத்து, ஷா தம் புரியமுடியாச் சீற்றமுழுவதும் யாவர் மீதும் காட்டினார். இவை உலகின் போலி மரபுகள் என்றும், பொதுமக்கள் வாழ்வை உயர்த்துவதற்குமாறாக அவர்களைச் சுரண்டி வாழ்பவரின் புறவேடப் பசப்புக்கள் என்றும் அவர் எண்ணியதே இதற்குக் காரணம்.
பெர்னார்டுஷாவின் துணிச்சல், பிடிவாதம் ஆகியவை, அவர் புகழை ஒரு சரக்காக்க முனையும்போதெல்லாம் பீறிட் டெழுந்து பிறரைத் திகைக்க வைத்தன. வணக்க இணக்கத்தையும் பணிவார்வத்தையுமே கண்டு பழகி, அவைகளையே பெரிதும் எதிர்பார்க்கும் செல்வரும், அவர் வணங்காமுடிப் பண்பும் தற்போக்குத் தற்சார்புகளும் கண்டு முதலில் புறக்கணிக்கப் பார்த்தனர்; பின் சீறினர். இறுதியில் அதனை அவரளவில் தனிவிலக்களித்து மதிக்க வேண்டியதாயிற்று. இஃது அவர் தனித்திறமை, தனிப்பட்ட தற்பண்பு காரணமாகவேயாயினும், அஃது உலகில் பிற்பட்டவர், பிற்பட்ட வகுப்புக்கள், பிற்பட்ட நாடுகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டி ஆகும். பிறரின் பரிவையும் அருளிரக்கத்தையும் எதிர்பாராமல், அதில் நிறைவுபெற்று உள்ளூற அடிமைத்தனத்தை அணைக்காமல், தற்சார்பும் தன் முயற்சியுமுடையவராய், தன்மதிப்புடன் போராடி வெற்றிபெற்ற வருக்கே, சரிநிகர் அடிப்படையில் நட்புத் தோழமை கிட்டும் என்பதை அவர் வாழ்க்கை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
அறிவுத்துறையில் ஷாவின் வாழ்வு ஸர் ஃவிரான் ஸிஸ் பேக்கன் கூறிய பலவகை மரபுமருள்களையும் அகற்றி, உலகுக்கே நிலையாக ஒரு புதுவழி வகுத்த தென்னலாம். இம்மருட்சியின் பொதுத்தன்மையைத் திருவள்ளுவர் நமக்குத் தெள்ளத்தெளிய விளக்கியுள்ளார்:
“பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு.
உண்மையில் பொருள் அல்லாதவற்றை உண்மைப் பொருள் என மயங்குபவர் வாழ்க்கை, மேம்பாட்டுக்கு உரியதாகாது என்பது