(156
|| - -
அப்பாத்துரையம் - 8
இதன் கருத்து. ஸர் ஃபிரான் ஸிஸ் பேக்கன் இம்மருட்சியைக் குடும்ப மருட்சி, (Idols of the hearth) ஊர் மருட்சி(Idols of the market lace), வகுப்பு மருட்சி(Idols of the calss), மனித இன மருட்சி(Idols of the ‘race’ i.e. human race)என்று வகுத்துள்ளார். குடும்பத்தி னருக்குப் பொதுவான அடிப்படைப் பொது அறிவையும் தப்பெண்ணங் களையும் அதில் பிறப்பவன் பிறப்பிலேயே பெற்று ஆராயாமல் ஏற்றுக் கொள்கிறான். இதுபோலவே ஊர், நாடு, உலகப்பகுதி ஆகிய வற்றின் அறிவெல்லைக்கும் ஆராயாமல் அறிவுகட்கும், மனித இனத்தின் அறிவெல்லைக்கும் வரம்பு உண்டு. ஷா பேக்கனைப் போல இவ்வுள்ளார்ந்த உண்மையை அறிந்தவர். அத்துடன் அவ்வறிவைச் செயற்படுத்தவும் முனைந்தவர். இதனை ஷாவின் பல துணிகர ஆய்வுரைகளிலும் காணலாம். கலையுடன் வாழ்க்கையும், வாழ்க்கையுடன் கலையும் தொடர்பற்றனவென்பது ஷாவின் காலத்தவரும், அக்காலத்தில் ஆட்சி நலமுடைய உயர் நடுத்தர வகுப்பினரும் கொண்ட கோட்பாடு. கலை அறிவைப் பரப்புதல், ஒழுக்கம் ஆகிய நோக்கமுடையதன்று; நோக்கமுடைய தாயிருத்தல் கூடாது என்று அவர்கள் கருதினர். நாம்கூட ஷா உரைகளைக் கேட்குமுன் அப்படித்தான் நினைத்திருக்கக்கூடும். ஏனெனில், ஒழுக்க நூல்கள் பெரிதும் கலைவடிவில் எளிதில் எழுதப் பெறுவதில்லை. கலைநூல்கள் ஒழுக்கமுடிபுடை யவையானால், கலைப்பண்பை இழந்துவிடுவதும் காணலாம். கலை வாழ்க்கைத் தொடர்பும், அறிவாராய்ச்சித்தொடர்பு முடையது என்பதை வாதிட்டு நிலைநாட்ட ஷா மிகவும் பாடுபட்டார். அவ்வாதத்தை விட அதற்கு இலக்கியமாக அவர் படைத்தளித்த ‘அறிவுக்கலை' என்ற புதிய துறை நமக்கு நல்ல படிப்பினையாகி யுள்ளது.
வாழ்க்கையில் அறிவே முற்போக்குக்குக் காரணம்.ஆனால், அதன் அடிப்படைப் பண்பு உணர்ச்சி. அதுவே ஆற்றல் தரும் பண்பும், செயல் தூண்டுதல் தரும் பண்பும் ஆகும். அறிவு, உணர்ச்சி இரண்டிற்கும் அடிப்படையான தற்பண்பும், தற்சார் பும், உறுதியும் அக ஆற்றலின்(will power) பண்புக் கூறுகள். இவற்றுள் மற்ற இரண்டும் அறிவுத்திறத்துக்கு உதவ வேண்டும் என்றும், கலையிலும் வாழ்விலும் உணர்ச்சியை உணர்பண்பாகப் பரப்பி முன்னேற்றம் தடைப்படுத்தப்பெறக் கூடாதென்றும் முதன் முதல் எடுத்துக்காட்டியவர் பெர்னார்டு ஷாவே