அறிவுலக மேதை பெர்னாட்சா
(157
என்னலாம். அறிவுத்திறம் ஆண்மைக்குரிய சிறப்புப் பண்பு. பெண்மைக்கு உணர்ச்சித்திறமே இயற்கைப் பண்பாயினும், அறிவுத்திறமுடைய பெண்டிரே உயர்சிறப்புக்குரியவர். அங்ஙனம் சிறப்பெய்தாத பெண்டிர் ஆடவர் அறிவு முயற்சிகளைத் தடை செய்யத் தம் உணர்ச்சியையும், கவர்ச்சியையும் பயன்படுத்தக் கூடாது. இவ் வெச்சரிக்கையைத் தந்தது ஷா ஒருவரே.
வாழ்க்கை குறிக்கோளற்றதன்று. ஆனால், சமயவாளிகள் அக்குறிக்கோளைப் பெரிதும் பழமையிலேயே பார்ப்பர். அதனைத் தொடர்ந்த வளர்ச்சியாகக் கருதுவதில்லை. அறிவி யலாளரோ அக்குறிக்கோளை அறிவற்றி, பொருளற்ற ஒரு குருட்டுப் போக்கெனவே காண்கின்றனர். ஷா உலக வாழ்வையும், நாகரிகத்தையும் ஒரு தொடர்ந்த நிலையான உள்ளார்ந்த உயிராற்றலின் செயல் திறம் எனக் கொண்டார். இஃது ஒரு வகையில் கடவுள் போன்ற ஆற்றலேயாயினும், கடவுளைப் போலன்றி வளர்ச்சியும், அவா ஆர்வநோக்கும் உடையது.உலகை வளர்த்து அவ்வளர்ச்சியுடன் வளர்வது. அதே சமயம் அஃது யற்கைபோன்ற குருட்டு ஆற்றலன்று; குறிக்கோளற்ற ஆற்றலுமன்று. அஃது எல்லா உயிர்களையும் ஒரு குறிக்கோளை நோக்கித் திட்டமிட்டியக்கும் இயக்க ஆற்றல் ஆகும். இங்ஙனம் வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோளும் கற்பித்து, இதனடிப்படையாக ஒரு வாழ்க்கைத் திட்டம் வகுத்து அதன் வாயிலாகவே ஷா கலையில் அறிவும் ஒழுக்கமும் ஊட்டும் ஒப்புயர்வற்ற அரும் பணியை ஆற்றினார். அறிவுக்கலை என்ற புதிய கலைமரபையும், அறிவார்வ உணர்ச்சி என்ற ஒரு புது உணர்ச்சியையும் கலை உலகுக்கு அவர் தந்துள்ளார்.
சமயத்துறையின் பொருளற்ற குருட்டுநம்பிக்கை களையும், பழக்க வழக்கக் கட்டுப்பாடுகளையும் ஷா வெறுத்தார். அறிவாராய்ச்சியிற் சிறந்த பலர்கூட அறிவுத்துறையில் உயர் கருத்துக்களுடன், உணர்ச்சித்துறையில் இக் கீழ்த்தர மரபு கொண்டு, முரண்பட்ட இருதன்மைகள் உடைய ஒரு மனிதராக(double personality) வாழ்கின்றனர். ஷாவின் தனிச் சிறப்பு அவர் அறிவடிப்படையாக உணர்ச்சியையும் உள்ள உறுதியையும் உருவாக்கி, முழுநிறை பண்புடைய, ஆனால் முரண்பாடற்ற மனிதராக விளங்கினார் என்பதே. இந் நிலையில் முரண்பாடற்ற ஒருமைப்பாட்டமைதியுற்ற அவர் வாழ்வும் சொல்லும் செயலும்,