(160) ||
அப்பாத்துரையம் – 8
உலகமக்கள் கூறிய அருட்பற்று ஆகிய உயர்நலங்களெல்லாம் இப்போது மறைந்தொழிந்து விட்டன. இவற்றை மீட்டும் உயிர்ப்பித்தெழுப்ப, தனி மனிதரும் வகுப்புக் களும் மட்டுமன்றி, நாடுகளே ஆர்வத்துடன் கேட்கத்தக்க நடுநிலைப் பண்புடைய பேரறிஞர் குரல் ஒன்று இப்போது மிக இன்றியமையாது வேண்டப்படுகிறது.”
நாடுகளின் ஆர்வத்தைத் தூண்டவல்ல பேரறிஞராகவே ஷா விளங்கினார். கில்பர்ட்மரே எதிர்பார்த்த அரிஸ்டோஃ வானிஸ் அவரே என்பது வெள்ளிடைமலை.
ஷாவின் தனிச் சிறப்புக்களுள் ஒன்று, அவருடைய நகைச் சுவை. ‘நகைத் திறத்தால் பலநாடுகளிலும் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றவர்’ என்று மரே தம் படைப்புரையில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவருடைய வசைமொழி எவரையும் பெரிதும் புண்படுத்தாதன் காரணம் இந் நகைச்சுவையே. சீன நாட்டினர் ஒருவர் ஷாவை நேரிற் கண்டு அவர் உடலமைப் படையாளம் ஒவ்வொன்றையும் பாராட்டத் தொடங்கினாராம். அவர் பற்களை அன்பர் கவனிப்பது கண்டு ஷா, "பல்லின் தோற்றம் எப்படி?” என்றார். “மிகப் பாராட்டத்தக்கதாகவே இருக்கிறது,” என்றார், அச்சீன அன்பர்.“அப்படியானால் அதை அருகில்வைத்தே பாருங்களேன்,” என்று கூறி ஷா பற்களைக்கை யில் எடுத்துக்கொடுத்தாராம். பாராட்டுக்குரிய பற்கள் பொய்ப் பற்கள் என்பதை இதைவிட நகைத் திறம்பட எப்படிக் காட்ட முடியும்! நகைச்சுவை விளைவிப்பதற்காக அவர் எவ்வகை முரண்பாட்டையும் எடுத்துக் காட்டத் தயங்கியதில்லை; எத்தகைய முரணுரையையும் வலியுறுத்தப் பின் வாங்கியதில்லை. பலசமயம் அவர் தம்மையே தம் நகைத்திறத் திற்கு ஆளாக்கிய துண்டு, உண்மையில் அவர் பண்போவியங்களுள் தலைசிறந்த புனைவிய லோவியம் ஷாவின் ஓவியமே. நாட்டுமக்கள் ஷாவைக் காணும்போது இப்புனைவியலோவியத்தையே காணும்படி அவர் அதனைத் திறம்படப் பரப்பிவந்தார். எதையும் எதிர்ப்பவர், எவரையும் குறைகூறுபவர், பொருந்தாக் கூற்றுக்களைப் பொருத்திக் கூறுபவர், சுருங்கச் சொன்னால் அறிஞரிடையே ஒரு களிக்கூத்தர்! இதுவே அவர் தம்மைப்பற்றித் தாம் சித்திரித்துக் காட்டிய உருவம். ஆனால், இஃது அவர் புற உருவம். அவர்