அறிவுலக மேதை பெர்னாட்சா
161
மேற்கொண்ட தோற்றம் மட்டுமே. அவர் சீர்திருத்த ஆர்வத்தை, ஒழுக்க உயர்குறிக் கோளை, உள்ளார்ந்த ‘சமயங் கடந்த சமய’ ஆர்வத்தை மக்கள் விருப்பத்திற்கு மாறுபடாமல் ஊட்டுவதற் கான வழியாகவே ஷா இதனை வகுத்துருவாக்கினார்.
தம் வாழ்க்கையில், தம் தோற்றத்தில் ஷா அசட்டையா யிருந்தார். இஃது உண்மையில் அவர் தன்மதிப்பு இறுமாப்பின் ரு கூறேயன்றி வேறன்று. அவர் மனம் வைத்தால் எதையுந் திருந்தச்செய்யும் ஆற்றலுடையவர் என்பதைப் பிறருக்காக அவர் செய்த செயல்கள் காட்டுகின்றன. பெரியார் பலர் தம் வாழ்க் கையில் காட்டும் சிறு குறைபாடுகள், பொதுத் திறமையின்மை, சீற்றம் ஆகியவை அவரிடம் கிடையா. தம் வாழ்க்கைத் தேவைகள் எதனையும் அவர் பிறர் உதவியில்லாமல் திறமையாக நிறை வேற்றிக்கொள்ளும் ஆற்றலுடையவர். ஆகவே, புறத் தோற்றத்தில் உலகின் பார்வைக்கு அவர் தம்மை ஒரு கோமாளியாகக் காட்டிக் கொண்டாலும், தனி வாழ்க்கையில் அவர் 'பொது மனிதன்' திறங்களில் குறைவுபடா முழுமனிதனாகவே விளங்கினார். மிதிவண்டி ஊர்ந்து செல்லல், தொலைபேசி கையாளல், வானூர்தி யியக்கல், தேவைப் பட்டபோது இவற்றைத் தாமே செப்பனிடல் முதலிய சிறுதிறச் செயல்களையும் அவர் தேர்ச்சி யுடன் செய்ய வல்லவர். தொடக்க நாட்களில் பணிமனையில் இத்திறங்களாலேயே அவர் நல்ல பணியாளராகப் பொலிவுற்றார். அவர் நினைத்தால் கலைஞனாக மட்டுமன்றி வேறு எத்தொழில் துறையாளராகவும் சீரும் சிறப்பும் பெற்றிருக்கக் கூடும். பெரியோருள் அவர் தனிச்சிறப்புக்கூட அவர் பொது மனிதத் தன்மைநிறைந்த பெரியார் என்பதேயாகும்.
ஷாவின் தனிச்சிறப்புக்களுள் அறிஞரே, அறியத்தக்க வையும், நுண்கலைஞரே அறியத்தக்கவையும் உண்டு. ஆனால், எவராலும் எளிதில் கண்டுணரத்தக்க வெளிப்படையான, முனைப்பான கூறுகளும் மிகுதி. அரும்பொருள்களை வந்து பார்ப்பதுபோல, அவரை மக்கள் வந்து பார்க்கும் படி தூண்டிய பண்புகள் இவையே. பிறர் எதிர்பாராத, பிறரை மலைக்க வைக் கக்கூடிய தோற்றம், நடையுடை, கருத்துக்கள் ஆகியவற்றை அவர் என்றும் மேற்கொண்டார். அவர் வாதமுறை அறிஞர் ஆராய்ச்சி களுக்கு மட்டும் உரியதன்று. அடிக்கடி பொதுமக்கள் கருத்தைக்