(166
அப்பாத்துரையம் - 8
வண்டி புறப்பட இருக்கும் நேரத்தில், சிறுவன் கடைசியாகத் தன் அன்புகனிந்த வணக்கம் தெரிவித்து, “போய் வருகிறேன் அப்பா, அம்மாவுக்கு என் அன்புறுதியையும் வணக்கத்யுைம் தெரிவியுங்கள்,” என்றான்.
இதற்குள் சாட்டை, காற்று வெளியில் ‘சுளீர், சுளீர்’ என்று அடித்தது. குதிரைகள் தலைநிமிர்ந்து முகம் நீட்டிக் காலைத் தூக்கி நடை தொடங்கின. வண்டி மெல்ல நகர்ந்தது; பின் விரைந்து; மீண்டும் முன்போல் பாய்ந்து சென்றது.
வண்டி தொலைவில் செல்லும்போதே, “பனி மிகுதி, டாம், கழுத்தையும் காலையும் நன்றாக மூடிக்கொள்” என்ற தந்தையின் குரலை அப்பனிக்காற்று சுமந்துகொண்டு பையனிடம் சென்றது. பையன் டாம் கழுத்தைக் கச்சையாலும் காலைக் கம்பளி துண்டு ஒன்றினாலும் போர்த்திக் கொண்டான்.
வண்டி மறையும்வரை சிறுவன், தந்தையையே பார்த்துக் கொண்டு சென்றான். தந்தையும் சிறுவனையே பார்த்துக் கொண்டு நின்றார்.
திருவாளர் பிரௌன் தம் முயற்சியாலேயே முன்னுக்கு வந்த ஒரு நடுத்தர வகுப்புச் செல்வர். அவர் கல்வி வாய்ப்பற்ற ளமைக் கல்வி நீரோடையின் அருமையை நடுவயதுக்குள் ஓரளவு அறிந்துகொள்ளவும் அத் தன் முயற்சியே உதவிற்று. தம் பிள்ளை டாமுவுக்கு அந்த வாய்ப்பை எவ்வளவு விரைவில் கொடுக்கமுடியுமோ, அவ்வளவு விரைந்து கொடுக்க அவர் ஆர்வம் கொண்டார்.சிறுவனையும் அந்த ஆர்வம் பற்றியிருந்தது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மலைக்கும்படியாக அவன் ஆண்டுப் படிப்பை மாதப்படிப்பாகவும், மாதப்படிப்பை வாரப்படிப்பாகவும் தாண்டி வந்தான்.
அவனுக்கு இப்போது வயது பன்னிரண்டுதான். தாயின்மடி இன்னும் அவனுக்கு முற்றிலும் விடைகொடுத்துவிடவில்லை. ஆயினும் தந்தை, மகன் ஆகிய இருவர் ஆர்வத்துக்கும் அவள் தடைபோட விரும்பவில்லை.
“பெண்மணி, நம் கண்மணியை லண்டனுக்கு அனுப்பப் பள்ளி அரையாண்டு' பிறக்கும்வரை நான் காத்திருக்க விரும்பவில்லை. இந்த அரையாண்டிலேயே ஆறு வாரம்