டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
(167
விண்போவானேன்? இப்போதே அனுப்ப ஆய்த்தமாயிரு” என்று அவர் டாமின் தாய் திருமதி பிளெணிடம் கூறினார்.
"வீடும் பள்ளியும் தவிரப் பிள்ளைக்கு இன்னும் ஒன்றும் பழக்கம் போதாதே! நகரத்தில் அவன் எப்படித் தனியாக நாட்கழிக்கப் போகிறான்?" என்று தாய் முதலுல் மலைத்தாள். ஆனால், குழந்தை டாமின் கண்களில் வீசிய ஒளி ஆர்வத்தையும் உணர்ச்சித் துடிப்பையும் கண்டபின், அவள் அவனை அனுப்ப இணங்கினாள்.
பர்மிங்ஹாமிலிருந்து லண்டன் செல்லும் வாடிக்கை வண்டிகள், பர்கஷயர் வழியாகச் செல்லும் ஆனாலும் திரு.பிரளெண் உசாவியதில், அவை ரக்பி பள்ளி வழியாகப் போகமாட்டா என்றறிந்தார். ஆனால், டாலிஹோ அஞ்சல் வண்டி பர்கயருக்கு அருகிலுள்ள இஸ்லிங்டன் வழியாகச் சென்று ரக்பி பள்ளி வாயில் கடந்தே லண்டனையடையும் என்பது அவருக்குத் தெரியவந்தது. இஸ்லிங்டனிலுள்ள ‘மயிலகம்' என்ற வழி அருந்தகத்தில் வண்டி சிறிது தங்கியே செல்லும் என்பதையும் கேள்விப்பட்டார். தங்கிப் புறப்படும் நேரம் விடிய ஒரு யாமப்போது. ஆகவே, அவர்கள் நள்ளிரவு கடந்தவுடன் புறப்பட வேண்டியதாயிற்று.
ரக்பி பள்ளி, லண்டன் நகரில், புறச்சேர்வையிலேயே இருந்தது. ரக்பி வழியாக நகர் செல்லும் வண்டியில் சென்றால், லண்டனை வழியில் பார்க்க முடியாது. நேராக லண்டன் செல்லும் வண்டியில் சென்றால்தான், அதைப் பார்த்துவிட்டு ரக்பி செல்லலாம்.
லண்டன் மாநகர் எப்படியிருக்கும் என்பதைப் பார்க்க டாமின் சிறிய உள்ளம் ஆவல் கொண்டிருந்தது. அந்த ஆவல், அவ்வுள்ளத்தின் பள்ளியார்வத்துடன் போட்டியிட்டது. இரவைப் பகலாக்கிய விளக்கொளி வரிசைகள், எல்லையற்று நீண்டு திசையளாவிய தெருவீதிகள் ஆகியவை பற்றி அவன் கண்ட கனவுக் காட்சிகளை நனவில் காண அவன் கண்கள் விறுவிறுத்தன. ஆயினும் மற்ற வண்டிகளில் போனால் மாலையில்தான் ரக்பி சேரமுடியும். 'மயிலகமனை' ஏற்பாடுமூலம் நண்பகலிலேயே அங்கே சென்று, ஒருநாள் முன்கூட்டியே 'ரக்பி மாணவன்' என்ற படிமை அடையலாம். இந்த எண்ணம் மயிலக ஏற்பாட்டை அவன் தன் மனமுவந்து ஏற்கும்படி செய்தது.