டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
169
வகையில் எவ்வளவு பெருமைகொள்கிறான் என்பதை நீ நினைத்துக்கொள். அந்தப் பெருமையை நீதான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.
L
‘அம்மா’வைப்பற்றிய எண்ணம் வந்ததும், டாமின் கண்களில் நீர் ததும்பிற்று. அதைத் தந்தையறியாமல் மறைத்துக் கொண்டு, 'அம்மாவுக்குக் கவலை எதுவும் வேண்டாம்; அப்பா! எல்லா இடர்களையும் நான் நன்றாகச் சமாளித்துக் கொள்வேன். உங்கள் அறிவுரையை ஒருசிறிதும் மறக்கமாட்டேன்' என்றான்.
அவன் கண்ணீர் கண்டும், காணாதவர்போல, அவன் கவனத்தை மாற்ற நினைத்து, திரு.பிரௌண், “சரி, உன் பணத்தைப் பத்திரமாக வைத்திருக்கிறாயா? மறந்துவிடவில்லையே!” என்றார்.
க
'இதோ, பத்திரமாக இருக்கிறது' என்று ஒருபுறச் சட்டைப் பையைத் தட்டிக்காட்டினான்டாம்.
'உன் பெட்டியின் திறவுகோல்?'
'இதோ!' என்று மறுபுறச் சட்டைப்பையைத் தட்டினான்
சிறுவன்.
ஏவலாளர் இச்சமயம் குறுக்கிட்டு, "அதோ வலவன் வண்டியில் ஏறிக்கொண்டார். காவலாளும் பக்கத்து ஊர் விளையாட்டுப் போட்டிக்குச் செல்லும் ஆட்டக்காரர் ஒருவரும் போய் வண்டியில் ஏறப்போகிறார்கள்: நாமும் போவோம்,” என்றான்.
ஏவலாள் பெட்டியுடன் பின்வர, தந்தையும் மகனும் நாம் மேலே கூறியபடி அஞ்சல் வண்டி சென்றனர்.
'பூம், பூம்! குக்கூ குகூ' என்று குழலூதிற்று. அஞ்சல் வண்டி காற்றும் பின்னிட முன்னோடிச் சென்றது. குதிரையின் காற் குளம்புகள் தடார் தடார் என்று நிலத்தை அறைந்து விரைந்தன. சக்கரங்கள் கடகட வென்று உருண்டன. நான்கு குதிரைகளும் மாறிமாறித் தலையைத் தூக்கிய வண்ணம் ஒன்றை ஒன்று முந்தப் போராடுபவைபோல் ஒத்தோடின.
'மயிலகத்தில் என்ன புதுச்சுமை?' என்று சாட்டையை வீசியவாறு ஒரு கேள்வியை எறிந்தான், வலவன்.