பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(176

||– –

அப்பாத்துரையம் – 8

டாமின் வெள்ளையுள்ளம்கூட நம்முடியாத அளவு கற்பனைகள் பொருத்தமற்ற கூட்டாக இருந்தன.

ரக்பியிலிருந்து மூன்றாங் கல்லுக்கு அவர்கள் வந்து விட்டனர். ரக்பி அருகில் வரவர டாமின் நெஞ்சு ஆர்வத்தால் துடித்தது. எதிரே வரும் ஒன்றிரண்டு சிறுவர்களைச் சுட்டிக் காட்டிக் காவலாள், "அதோ வருபவன் ரக்பி மாணவன்தான். அவன் படுசுட்டி. வண்டி வரும் நேரமறிந்து எதிரே வந்த குதிரைகளுடன் போட்டியிடாமல் இருப்பதில்லை," என்றான்.

ரக்பி மாணவன் என்றவுடனே டாமின் நேச உள்ளம் அவனைச் சென்று காட்டிக்கொள்ள விரும்பிற்று. ஆனால், புதிய ஆளுடன் அவ்வாறு பழக அவன் கூச்சம் இடம்தரவில்லை. ஆவலுடன் அச்சிறுவனைப் பார்ப்பதுடன் அவன் நிறுத்திக் கொண்டான். சிறுவனும் காவலாளியின் விரிவுரையை

மெய்ப்பித்தான். டாமைப் பார்த்து, "அடேயாருடா, புதிய கத்துக்குட்டி, வண்டியிலேண்டா குந்தியிருக்கிறாய். என்கூட ஓட்டப்பந்தயம் விடுகிறாயா? என்று தாராளமாகப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தான். டாம் பேசாதிருந்தான். சிறுவனும் வண்டி வரும்வரை நின்று, பின் காவலாள் கூறியது போலவே குதிரைகளுடன் ஒத்துத் தன் குதிகால் பிட்டியில்பட ஒடிவந்தான்.

வேறு சில சிறுவர் சிறுமியரும் அவ்வப்போது வந்து இவ்வாறு ஓடினர். அவரவர் ஆற்றலுக்கேற்ற அளவு தொலை ஓடிய பின் அவர்கள் பின் தங்கினர்.

ஒன்றிரண்டு சிறுவர் காவலாளை, "டேய் குதிரைவால், டேய் அஞ்சல்குட்டி,” என்று கேலிப் பெயரிட்டு அழைத்துக் கும்மாளமிட்டுச் சென்றனர். அவர்கள் காவலாளுடன் நெருங்கிப் பழகி அவனுடன் தோழமை பூண்டவர்கள், காவலாளும் அவர்களுடன் அதட்டியும் சிரித்தும் தலையாட்டியும் தன் பழக்கத்தின் அளவையும் தோழமையின் நெருக்கத்தையும் வெளிப்படுத்தினான்.

இரண்டாவது நாழிகைக்கல்லிலிருந்து ஒன்றாங்கல்வரை சிறுவன் ஓடிவந்து, அத்துடன் நின்றான். அப்போது காவலாள் தன் சட்டைப் பையிலிருந்து கைக்கடிகாரத்தை எடுத்துப்பார்த்து,