பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. புது நண்பன்

ரக்பி மாமனை வாயிலைக் கண்டதே டாம் செயலற்று நின்றதற்குக் காரணம் உண்டு. அவன் கனவுகண்ட தோற்றங்கள் எதுவும்நேரில் கண்ட அக்காட்சியை எட்டிப் பிடிக்க முடிய வில்லை. கட்டடம் பெரிதாகவும் கிளைக் கட்டடங்கள் பலவாகவும் இருக்கும் என்பதை அவன் எதிர் பார்த்திருந்தான். ஆனால் அது ஒரு சிறு நகரம் என்பதை அவ்வாயில்கள் அவனுக்கு எடுத்துக்காட்டின. அதனுள் தங்கு தடையின்றி ஓடியாடித் திரியும் சிறுவர் இளைஞர்களைக் கண்ட போது, அது ஒரு தனி உலகம், என்று அவனுக்குத் தோன்றிற்று. இவ்வளவு தங்கு தடையற்ற விடுதலை பள்ளியில் இருக்கக்கூடும் என்பது அவனுக்குத் தெரியாது. தற்கட்டுப் பாட்டுக்கு உட்பட்ட விடுதலை இன்ன தென்பதை அவன் இன்னும் அனுபவித்தறியவில்லை.

ஐந்து அஞ்சல் வண்டிகள் ஒருங்கே செல்லத்தக்கனவாய் வாயில்கள் அகலமாக இருந்தன. மதில்கள் எங்கே சென்று முடிந்தன என்று காணமுடியவில்லை. வாயிலிருந்து நேரே சென்ற பாதை அவன் வந்த பாதையைவிட அகலகமாகவும் செப்பனிட்ட தாகவும் இருந்தது. அதிலிருந்து பலகிளைப் பாதைகள் பல திசைளிலும் பரந்து சென்றன. பாதைகளின் இருபுறமும், அகன்ற புல்வெளிகள், மணற் பரப்புக்கள், வளைந்து வளைந்து செப்ப மிடப்பெற்ற தோட்டப்பாத்திகள், பூந்தொட்டிகள், கொடிப்ப ந்தர்கள் இருந்தன. பல புல்வெளிகளில் பிள்ளைகள் உதைபந்தும் மட்டைப்பந்தும் பூம்பந்தும் விளையாடிக் கொண்டிருந்தனர்.சில பிள்ளைகள் குத்துச் சண்டை, மற்போர் புரிந்தும் கூவி ஆரவாரம் செய்தும் நின்றனர்.

மதிலகத்துக்குள்ளே ஆங்காங்கே பெரிய படர் தேக்க மரங்கள் இருந்தன. அவற்றின் உயரமும் பரப்பும் அவற்றின் பழைமையைச் சுட்டிக் காட்டின. நண்பகலாதலால் அவற்றின்