பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 ||-

அப்பாத்துரையம் – 8

நிழலிலேயே மாணவர் கும்பு கூடியிருந்தனர். மரங்களுக்கப் பாலும் இப்பாலும் கட்டடங்களும் பல இருந்தன. இத்தனை கட்டடங்களில் எது பள்ளி, அல்லது இத்தனையும் பள்ளியைச் சார்ந்தவையா என்று டாம் வியப்படைந்தான். ஆனால் பாவம், இத்தனையும் சேர்ந்து கூடப் பள்ளியன்று, பள்ளிமாமனையின் ஒரு பகுதியான பள்ளி இல்லமே என்பதை அறிந்தால் வியப்பு இன்னும் மிகுதியாகவே இருந்திருக்கும்!

இப்பெரிய அகல் வெளியில் எப்பக்கம் போவது, யாரைக் காண்பது என்று தெரியாமல் டாம் விழித்துக் கொண்டிருந்தான்.

'தம்பி, உன் பெயர்தானே பிரௌண், டாம் பிரௌண்?' என்று குரல் கேட்டு டாம் வியப்புடன் திரும்பினான். அது அவனுக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒரு சிறுவன் குரல். அவன் விளையாட்டுக் குழுவிலிருந்து பிரிந்து வந்ததையும், தன்னைப் பல கோணங்களிலிருந்து கவனிப்பதையும் டாம் பார்த்திருந்தான். ஆனால் அது புது ஆளைக் காணும் ஆர்வம் மட்டுமே என்று இருந்துவிட்டான். அவன் பின்னாலிருந்து தன் பெயர் கூறிக் கூப்பிடுவான் என்று அவன் எண்ணவில்லை. அவனுக்கு எப்படித் தன் பெயர் தெரியும்? டாம் வியப்புடன் மரம்போல வாளாது நின்றான்.

'என்ன தம்பி, உன் பெயர் டாம் பிரௌண் அல்லவா? ஏன் விழிக்கிறாய், விடை கூறாமல்?' என்று சிறுவன் மீண்டும் கேட்டான்.

‘ஆம். உனக்கு என் பெயர் எப்படித் தெரியும்? நீ யார்? என்று கேட்டான் டாம்.'

‘ஆ,நான் எண்ணியது சரி, நீ விழிக்கிற விழிப்பிலேயே புது ஆள் என்றும், உன் சாடையிலிருந்தே பிரௌண்தான் என்றும் தெரிந்து கொண்டேன்.நான் இப்பள்ளி மாணவன். என் பெயர் ஈஸ்ட் முதல் அரை ஆண்டு எனக்கு முடிய இருக்கிறது. பிள்ளைகள் எவரும் சேராத இந்தச் சமயத்தில் உன்னை உன் தந்தை இங்கே அனுப்புவதாக என் அத்தை எழுதியிருந்தாள். ஆகவேதான் நான் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.’ ‘யார் உன் அத்தை?’