டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
6
181
என் அத்தை திருமதி ஈஸ்ட் பர்க்ஷயரில் உங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கிறாளாம். நான் அவள் வீட்டுக்கு வந்தது கிடையாது. ஆனால் அவள் என் வீட்டுக்கு அடிக்கடி வருவாள். என் மாமன் உயிருடன் இருந்த காலத்தில், அவர் உன் தந்தையின் பங்காளியாயிருந்தாராம். அதனால், என் அத்தை உங்கள் சிறு று
வீட்டுக்கு வருவதுண்டாம். பிள்ளையாயிருக்கும்போது உன்னை அவள் அறிவாள். ஆகவே நீ பள்ளி வரும் செய்தி அறிந்ததும், இங்கே எனக்கு எழுதினாள். உன் புது வாழ்வில் உனக்கு அண்ணனாக இருந்து உதவவேண்டும் என்று அவள் எனக்கு அன்புக் கட்டளையிட்டிருக்கிறாள். உனக்கு அதில் விருப்பந்தானே!' என்றான் ஈஸ்ட்.
டாம் நன்றி தெரிவிக்கும் முறையில் அவன் கையைப் பிடித்தழுத்தினான். 'தெரியாத இடத்தில் எங்கே போவது; யாருடன் பேசுவது என்று நான் தயங்கிக் கொண்டிருந்தேன். என்னைக்கண்ட எந்தச் சிறுவனும் பேசக்கூட இல்லை.அனைவரும் கூர்ந்து பார்த்துச் சென்றார்கள். ஆசிரியர்களையும் காண முடியவில்லை.இந்நிலையில் நீ எனக்கு அண்ணனாகக்கிடைத்தது பற்றி மகிழ்ச்சியடைகிறேன். என் நன்றி' என்றான் அவன்.
டாம் நாகரிகப் பழக்க வழக்கங்களறிந்தவன் என்று கண்டு ஈஸ்ட் மனநிறைவு கொண்டான்.
'சரி, இப்போது ஆகவேண்டியதைப் பார்ப்போம். பின் உன்னைப் பள்ளிக் கட்டட முழுவதும் கொண்டு காட்டுகிறேன்' என்றான் அவன்.
அவன் சிறுவனாயினும் உடனடியாகடாமின் பாதுகாவலன் என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதற்கான தன் தகுதியைக் காட்டினான்.
ப
'கூயீ,கூயீ!' என்று அவன் கூவினான்.கூயீ என்பது ஒரு சுமை தூக்கியின் பெயர். அவன் உடனே ஓடிவந்தான். 'ஆறு துட்டுத் தருகிறேன், இந்தப் படுக்கை பெட்டிகளைப் பள்ளி இல்லத்தில் தற்போதைக்கு என் அறையில் கொண்டுபோய் வை;' என்று அவனுக்குக் கட்டளையிட்டான்.
டாம் தன் சட்டைப் பையிலிருந்து ஆறு துட்டு (Penny) எடுத்து, 'இதோ என்னிடம் இருக்கிறது' என்றான். ஈஸ்ட்