பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

அப்பாத்துரையம் – 8

'இருந்தால் கொடு' இல்லா விட்டால் நான் கொடுக்கிறேன்; என்று கொடுத்த துட்டை வாங்கிக் கூலியிடம் தந்து 'பத்துக் கணங்களுக்குள் கொண்டு சேர்க்க வேண்டும், தெரியுமா? இல்லாவிட்டால் பின்னால் வேலை தரமாட்டேன்! என்று பெரிய மனிதன் தோரணையில் உறுக்கினான்.

கூலியும் நன்றி தெரிவித்துச் சுமையுடன் நடந்தான்.

இளவரசுப் பட்டம் கட்டப்போகிற இளவரசனை நாடு சுற்றிப் பார்க்க அழைத்துப் போகும் அரசன் போல டாமை ட்டுக் கொண்டு நடந்தான் ஈஸ்ட்.

டாமிடம் ஈஸ்ட் ஊர்ச் செய்திகளைக் கேட்டுக் கொண்டும், பள்ளி பற்றிய விளக்கங்கள், குறிப்புகள் அளித்துக்கொண்டும் சென்றான். ஆனால் ஓரிடத்தில் அவன் திடீரென நின்று அப்போதுதான் பார்ப்பதுபோல டாமை ஏற இறங்கப் பார்த்தான்.

"நான் முதலிலேயே கவனிக்க மறந்துவிட்டேன். புதிய பையனான படியால், உன் உடையை யாரும் அவ்வளவாகச் சட்டைபண்ண மாட்டார்கள். உடையும் அத்தனை மோசமல்ல. ஆனால் உன் தலையணியுடன் நாம் ‘நாலு கட்டில்" கால் வைக்கவே முடியாது. இத்தகைய ‘கவிகையணி’2யை இங்கே யாரும் அணிவது கிடையாது. விளிம்பணி3 தான் அணிவர்.”

தன் கவிகையணி மிக நாகரிகமானது என்றே டாம் நினைத்திருந்தான்; இப்போதும் அந்த எண்ணத்தை அவன் எளிதில் கைவிட முடியவில்லை. ஆயினும் புது நண்பன் சொல்லுக்கு மாறு சொல்ல விரும்பவில்லை. ஆகவே தன் பெட்டியில் ஒரு விளிம்பணி இருந்தது என்று நண்பனிடம் கூறினான். கூலியாளைக் கூப்பிட்டுப் பெட்டியை இறக்கி அதை எடுத்தார்கள். அதை எடுத்ததும் ஈஸ்ட் அதை டாமின் தலையில் அமுக்கி வைத்துவிட்டு, சிரிப்பை அடக்காமல், சுற்றிச்சுற்றி ஆடினான். ‘ஆகா, கூட்டத்தில் செல்லும் மனிதருக்கு இது நல்ல குடைகூட அல்ல. கூரையேயாகும்' என்று அவன் நையாண்டி செய்தான். இன்னொரு சமயம் இது டாமைப் புண்படுத்தி யிருக்கும். இப்போது கள்ளமற்ற அந்நண்பனின் நகைச்சுவை அவனையும் பாதி சிரிக்கவைத்தது.