பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

183

இனி, புதிதாக ரக்பியின் தகுதிக்கேற்ற அணிதான வாங்க வேண்டும் என்ற உறுதிகொண்டு இருவரும் மனையின் மதிலருகே இருந்த ஆடையணிக் கடைக்கரனாகிய நிக்ஸனிடம் சென்றனர். டாமுக்கு ஏழரைத் துட்டு விலையுள்ள ரக்பி தலையணி அணியப்பட்டு மற்ற ஆடை அணிகளும் திருத்தப்பெற்றன. ஆனால் தலையணிக்கோ ஆடை திருத்துவதற்கோ எதுவும் யாரும் கோரவில்லை. இது கண்டு வியப்புற்ற டாமிடம் ஈஸ்ட், வீட்டிலிருந்து கொண்டு வரும் பணம் அல்லாமல், அரை யாண்டுக்கு ஒரு தலையணி வாங்க, பள்ளி பணம் தருகிறது. சேர்ந்தே அடுத்த திங்கட்கிழமை ஒரு தலையணிக்கான முறையீடு எழுதிப்போட்டு, இக்கணக்கைச் சரிப்படுத்திக் கொள்ளலாம். இது ரக்பி ஏற்பாடு என்றான்.

ரக்பி என்ற சொல் எத்தனை மதிப்புடன் வழங்கப்படுகிறது என்பதைக் கண்டு டாம் சிறிது அச்சங்கொண்டாலும், அப்பெருமையில் தானும் பங்கு கொண்டான்.

ரக்பி மாணவனின் முதலுரிமை அவனுக்குக் கிடைத்து விட்டது, சேருமுன்பே. அதுவே, அரையாண்டுக்கு ஓர் ஏழரைத் துண்டுச் செலவு செய்யும் உரிமை!

புதிதாக வரும் மாணவனுக்கு வேண்டிய அறிவுரையாகப் பல செய்திகளைக் கூறிக்கொண்டே சென்றான் ஈஸ்ட். “எல்லாம் ஒருவன் முதல் நடந்து கொள்வதைத்தான் பொறுத்தது, டாம்! அவன் எல்லாருக்கும் ஏற்றாற்போல் பொதுவான தோற்றமும் நடையும் உடையவனாய் இருந்தால் ஆயிற்று! ஏதாவது சிறிது மிகுதிப்படி தனிப் போக்காகவோ, ஏறுமாறாகவோ இருந்துவிட்டால் போதும், தொல்லைகள் ஏற்பட்டுவிடும். இன்னொன்று! இங்கே எல்லாரும் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். சொல்வதையும் செய்வதையும் இரண்டகம் இல்லாமல், தயங்காமல் நேரடியாகச் சொல்லவும் செய்யவும் வேண்டும். அப்போதுதான் அமைதியாக முன்னேற முடியும்.நான் முதலிலேயே ஆடையணி வகையில் கருத்துச் செலுத்தியதின் பொருள் இப்போது தெரிகிறதல்லவா? ஆடை கேடில்லை, தலையணியை மாற்றியாகவேண்டும் என்று நான் முடிவு செய்தற்குக் காரணம் அதுதான்!"