பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

185

வழிகாட்டியின் தொழிலையும் அறிமுகம் செய்யும் கடமையையும் ஈஸ்ட் மிக அழகாக நிறைவேற்றினான். முதலில் அவன் டாமைப் பள்ளி இல்லத்துக்கும் பள்ளி மாமனைக்கும் டையேயுள்ள அகன்ற வாயிலின் வழியாக இட்டுச்சென்றான். அங்கே இரண்டு மூன்று மாணவர்கள் தாம் நின்றிருந்தார்கள். புதிய ஆளிடம் வழக்கமாகக் கேட்கும் கேள்விகளையே அவர்கள் கேட்டார்கள். 'அடே, புதுக்காளை! உன் பெயரென்ன? ஊர் எது? வயது என்ன? எங்கே தங்குகிறாய்? எந்த வகுப்பு?' ஆகிய இவையே அவர்கள் கேள்விகள். முதல் ஒன்றிரண்டு கேள்விகளுக்கு டாமே விடை கூறினான். பிந்திய வினாக்களுக்கு ஈஸ்ட் தலையிட்டு, 'அவன் இனிமேல்தான் சேர வேண்டும். அதற்குள்ளாகக் கேட்கிறாயே,' என்று விடையிறுத்தான்.

பிள்ளைகளில் ஒருசிலர் பெயர்களையும் அவர்கள் பற்றிய சில விவரங்களையும் ஈஸ்ட் டாமுக்கு விளக்கினான். ஒவ்வொரு விளக்கத்திலும் ரக்பியின் முழு வாழ்வின் விளக்கத்தையும் ஈஸ்ட் செறித்து வைத்துக் கூறியதாக டாமுக்குத் தோற்றிற்று. உண்மையும் அதுவே, ஏனெனில் ஈஸ்டை மற்ற யாவரும் ரக்பியில் ஒரு மாணவன் என்று மட்டுமே கருதியிருக்கலாம். ஆனால் ரக்பியின் முழுப் பெருமையிலும் கட்டாயமாகத் தனக்கு எப்படியோ ஒரு பெருங்கூறு உண்டு என்று அவன் கருதியிருந்தான். சிறப்பாகப் பள்ளி மாமனையின் பல பள்ளி மனைகளில், பள்ளி முதல்வர் தனிமனையாகிய பள்ளி இல்லத்தின் பெருமையே அவன் உள்ளத்தை நிறைத்தது. இல்லத்தின் பெயருக்காக அவன் உயிர்விடவும் ஒருங்கி இருந்தான். அவன் கொண்டிருந்த ஒரே பற்று அப்பெருமைக்குரியராக எண்ணியவர்களிடம் அவன் கொண்ட அன்பே. அவன் ஒரே பொறாமையும் பேரவாவும் அவர்களைப்போல் தான் ஆகவில்லையே என்ற எண்ணத்தின் உந்துதலேயாகும்.

'பொதுவிடங்களை எல்லாம் நாம் பார்த்தாய் விட்டது. இனி நான் என் படிப்பறையைக் காட்ட வேண்டாமா? அதன் பக்கம் போவோம், என்றான் ஈஸ்ட்

‘என் படிப்பறை' என்ற சொல்டாமை முன்னிலும் பன்மடங்கு தட்டிஎழுப்பிற்று. அவன் வீட்டில் எல்லாம் அவனுடையதுதான். ஆனால் தங்கையருக்கும் அவற்றில் உரிமை உண்டு. தாய்