(186) ||
அப்பாத்துரையம் – 8
தந்தையாரிடம் அவன் அவற்றுக்குப் போட்டியிடுவதுண்டு. பள்ளிக்கூடங்களிலோ அவன் எந்தத் தனியுரிமையையும் எதிர்பார்க்கவில்லை. ஒரு தனி அரண்மனை என்று சொன்னால் ஏற்படும் வியப்பைத், 'தனி அறை' என்ற சொல் அவனுக்குத் தந்தது.
டாம் தன் நண்பனுடன் பள்ளியில்லத்தின் பெருங்கூடத்தைக் கடந்துசென்றான். கூடத்தின் மறுகோடி ஒரு நாற்கட்டில் கொண்டு போய்விட்டது. இது முப்பதடி நீளமும் அகலமும் உடைய, பதினெட்டடி உயர்ந்த ஒரு பெரிய மாளிகை. அதன் நடுவே இரண்டு நீண்ட மேடைப் பலகைகள் போடப்பட்டிருந்தன. மாளிகையின் இரண்டு சிறைகளிலும் நீண்ட தணலடுப்புக்கள் எரிந்து கொண்டிருந்தன. இந்நாற்கட்டைக் கடந்தபின் இரண்டு நீண்ட இடைவழிகள் இருந்தன. இரண்டிலும் மறுகோடியில் தணலடுப்புகள் மங்கலாக எரிந்தன. அவற்றின் ஒளிபுகாத விடங்கள் முற்றிலும் அரையிருளிலேயே இருந்தன. இவ்விடைவழிகளின் இருபுறங்களிலுந்தான் மாணவர்களின் தனிப்படிப்பறைகள் இருந்தன.
‘படிப்பறைக்குள் வந்து அதை நீ பார்ப்பதற்குள் உணவு மணி அடித்துவிடும் உணவுக்குப்பின் மாணவர் பெயரழைப்பு நடக்கும். ஆகவே விரைந்துவா'; என்று டாமை ஊக்கிக்கொண்டு ஈஸ்ட் தன் அறையைக் காட்டும் பெருமித உணர்வுடன் நடந்தான். முதல் இடைவழியின் ஒரு கோடியில் இருந்த ஓர் அறைக்குள் இருவரும் சென்றனர்.
ரக்பி மாணவனின் தனியரசுக் கோட்டையை டாம் முதன் முதலாகப் பார்த்தது அப்போதுதான். அத்தகைய எதையும் அவன் தன் கனவில் எதிர்பார்க்கவில்லை. அது உண்மையில் அவ்வளவு பெரியதல்ல. ஆறு அடிக்கு நாலடி அளவுள்ள அறையே. ஆனால் மாணவர் தனியறை ஒரு மாளிகை கூடமாகவே தென்பட்டது.
அதன் பலகணிகள் அகலமாயிருந்தன. ஆனால் அதில் கம்பியளிகளும் இரும்பு வலையும் இடப்பட்டிருந்தன. இது அறையின் வெளிச்சத்தைச் சற்றுக் குறைத்தது. பலகணியின் பக்கத்தில் ஒரு சதுர மேடை போடப்பட்டிருந்தது. அதன் மேல்