டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
189
கடைசியாக ஒன்றிரண்டு பேர் ஒளிந்து மெல்லத் தத்தம் இடத்தில் வந்து குந்தினர். இவர்களே ஏவலர், பணியாள், மடைப் பாளிக்காரர் ஆகியவர்களுடன் ஊடாடி மிகுதிப் படியாக உணவுப் பண்டங்கள் பெறத் தெண்டித் திரிந்தவர்கள்.
மாணவர்களையும் சட்டாம் பிள்ளைகளாகிய பள்ளியின் குடியாட்சித் தலைவர்களையும் தவிர அவன் ஆசிரியராக எவரையும் இல்ல உணவு மேடையில் காணவில்லை. ஆனால் ஆசிரியர்களைவிட மிகவும் வீறமைதியும் பண்பமைதியும் வாய்ந்து,நீண்ட தாடியுடைய ஒருவர் எல்லாவற்றுக்கும் தலைமை தாங்கினார், அவரும் ஓர் ஆசிரியர் என்று டாம் முதலில் நினைத்தான். அது பள்ளி இல்ல மாதலால், அது நேரடியாகப் பள்ளித் தலைவர் மேற்பார்வையிலேயே இருந்தது என்பது அவனுக்குத் தெரியாது.
அவர் வேறு யாருமல்ல. பிற்காலத்தில் பிரிட்டனில் மட்டுமன்றி, மேலை உலகிலேயே ரக்பியின் பெயரை ஒரு புகழ்ப்பெயராக்கிய டாக்டர் ஆர்னால்டேயாவர்.
L
அவர் யாரையும் அடக்க முற்படவில்லை. அவர் தன்னடக்க அமைதியே பிறரை அடங்கவைத்தது. அவர் கண்டிப்பைச் செயலில் காணாமலே, தோற்றத்தில் கண்டு சட்டாம் பிள்ளை களும் மெய்வாய் உளம் முற்றும் அடங்கி அமைந்தனர்.
உணவு முடிவில் அவர் எழுந்து, கடவுளை வணங்குவோமாக என்று வாய்திறந்து கூறினார். அனைவரும் ஒருவர் விடாமல் எழுந்து நின்றனர். இவ்விரண்டு செய்திகளும் வியத்தகு ஒற்றுமை அமைதியை நிலைநாட்டின. உணவில் இதற்குள் கைவைத்திருந்த மாணவர்கூட உடனே எடுத்த உணவை விட்டுவிட்டு எழுந்து நின்றனர். டாம் மட்டும் எவ்வளவு ஆர்வத்துடன் சுற்றுமுற்றும் பார்த்திருந்தாலும், உணவையும் அதற்குள் விரைவில் முடிந்திருந்தான்.
உணவுக்கூடத்திலிருந்து வெளிவந்தபின் மாணவர்களெல் லோரும் புதிய மாணவனாகிய டாமைச் சூழ்ந்து கொண்டனர். பள்ளியில் சேரும் போது ஆசிரியர் கேட்க வேண்டும் கேள்விகள் அத்தனையையும் அவர்கள் ஒன்றுவிடாமல் ஒரே மூச்சில் கேட்டுத் தீர்த்துவிட்டனர். தன் பிறப்பு, வயது, தாய் தந்தையர்