190) |-
அப்பாத்துரையம் - 8
விவரம், ஊர், கல்வி ஆகிய எல்லா விவரங்களையும் டாம் பொறுமையுடன் ஒவ்வொருவருக்கும் பல தடவை கூறினான். அவன் பொறுமையைக் கண்ட ஈஸ்ட் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, நீ விரைவில் பள்ளிப் பிள்ளைகளின் 'செல்வக்குட்டி’ ஆவது உறுதி என்று பாராட்டினான்.
மாணவனாகச்
மாலை நேரமாயிற்று, டாம் இன்னும் முறைப்படி சேர்க்கப்படவில்லை. யாரும் அவனை அவ்வகையில் கவனிப்பதாகவும் இல்லை. இது பற்றி அவன் வியப்படைந்தான். ஆனால் ஈஸ்ட் நிலைமையை விளக்கினான். “இன்று பள்ளி இல்ல நாள். வகுப்புக்கள் கிடையாது. ஆனால்
ன்றுதான் பள்ளி முழுவதும் அமர்க்களப்படும் நாள். இன்று பள்ளி இல்லத்தின் பெயரையும் புகழையும் நிலைநாட்ட நாங்கள் பாடுபட்டுப் பயன் எதிர்நோக்கும் நாள். நீ இந்த நாளில் வந்தது உனக்கு நல்லதாயிற்று. அரையாண்டில் இறுதியில் நீ வந்தாலும் ன்று வந்ததினால் அரையாண்டின் முழுப்பயனும் பெற்றாய்!" என்று இன்ப வெறிகொண்டவன் போலப் பேசினான்.டாமுக்கு ஒன்றும் எளிதில் விளங்கவில்லை.
பள்ளி இல்லம் ரக்பி மாமனையின் பல மனைகளில் ஒரு மனைமட்டுமே. ஆனால் நேரடியாகத் தலைவர் பாதுகாப்பி லிருந்ததால், அதற்கு மனைகளிடையே தனி மதிப்பு இருந்தது. இல்லத்தின் உறுப்பினரும் அது பற்றி எல்லையிலாப் பெருமை கொண்டிருந்தனர். முதல் அரையாண்டு மாணவர் அனைவரும், மற்ற வகுப்பில் பொறுக்கி எடுத்து சிலருமே அதில் இருந்ததனால், அவ்வில்லத்தின் பெருமையினூடாக, எல்லா மாணவரும் பள்ளியின் பொதுவாழ்வில் தோய்ந்து அதன் பழக்க வழக்கப் பயிற்சிகளில் பங்குபெற முடிந்து. பள்ளி இல்ல நாளில் பள்ளி இல்லம் ஒரு புறமாகவும் மாமனையின் மற்ற எல்லா மனைகளும் சேர்ந்த பள்ளிமனை மற்றொரு புறமாகவும் எல்லாக் கேளிக்கைகளிலும் போட்டியிட்டன. பள்ளி மனையில் திறமை வாய்ந்த பல பெரிய பிள்ளைகளும் ஆட்டக்காரரும் இருந்தனர். இல்லத்தின் பிள்ளைகள் பெரும்பாலும் புதியவராகவும் சிறுவராகவும் இருந்தாலும், இல்லத்தின் பெருமை காக்க அடிக்கடி மும்முரமாகப் போராடினர். அவ்வப்போது அவர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியும் நற்பெயரும் பெற்றனர்.