டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
191
ஈஸ்ட் அன்றைய பந்தயத்துக்கு டாமை இட்டுச் செல்ல விரும்பினான். ஆனால் பந்தயந் தொடங்க செல்ல விரும்பினான். ஆனால் பந்தயத் தொடங்க இன்னும் நேரம் இருந்ததனால், அவன் முதலில் பள்ளி ஆட்டக் களங்களைக் கொண்டு காட்ட எண்ணினான். டாமும் அவற்றைப் பார்க்க மிகவும் விருப்பார்வத்துடன் புறப்பட்டான்.
டாமும் ஈஸ்டும் மீண்டும் நாற்கட்டைக் கடந்து 'பெருந்தலை ஐவர்’ ஆட்டக்களத்தைப் பார்த்துக் கொண்டே அதற்கப்பாலிருந்த ‘பள்ளிப் பெரும் பொது'வை அடைந்தார்கள். ஐவர் ஆட்டக்களத்துக்கும் பெரும் பொதுவுக்கும் இடையே பள்ளியின் கோயில் மனை இருந்தது. இது பெரும் பொதுவை நோக்கி இருந்தது. ஆசிரியர்கள் வாழ்விடங்கள் பெரும் பொதுவுக்கு அப்பாலேயே இருந்தனவாதலால், கோயிலின் பின்புறம்வரை அவர்கள் அடிக்கடி வருவதில்லை. இதனால் கிடைத்த தங்குதடையற்ற விடுதலையைப் பள்ளியின் குடியாட்சிக் காவலர் நன்கு பயன்படுத்திக் கொண்டிருந்தனர். பிள்ளைகள் ஓடியாடித் தனிப்பட்ட முறையில் விளையாடுவதும், வீம்புப் போட்டிச் சண்டைகள் நடத்துவதும் இங்கேதான். இதன் ஒரு பாதி சிறுபுறம் என்றும், மறுபாதி பெரும்புறம் என்றும் அழைக்கப்பட்டன. சிறு புறத்தில் இளமாணவரும், பெரும் புறத்தில் பெருமான வரும் உரிமையாட்சி செலுத்தினர்.
ய
களங்களுக்கு அப்பால், கோயில்மனையடுத்து, மாமனையின் சிறிய ஏரியும், அதன் நடுவே அமைந்த மாமனையின் நீர் சூழ்ந்த திடலும் இருந்தன. இதைக்கண்டவுடன் ஈஸ்டுக்குத் திடுமென உள்ள எழுச்சி உண்டாயிற்று. "டாம்! மாலைப் பனி விழத் தொடங்கிவிட்டது. இந்தக் குளிர் உடலைத் தாக்காமலிருக்க வேண்டுமானால், உடலுக்குச் சூடேற்ற வேண்டும். ஆகவே, முழு மூச்சுடன் இருவரும் ஏரி கடக்கும்வரை ஓடுவோம், வா" என்று கூறி, மறுமொழிக்குக் காத்திராமல் உடனே ஓட்டம் பிடித்தான்.
டாமும் இம்மெனுமுன் அவ்வெழுச்சியில் பங்கு கொண்டு, அவனை எட்டிப் பிடிப்பவன் போல ஓடினான்.
தன் புதிய நண்பனுக்குத் தன் காலின் முழுத் திறனும் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஈஸ்ட் சிட்டாகப் பறந்தான்.