பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

||--

அப்பாத்துரையம் - 8

அதேசமயம் டாமுக்கும் தன் ஓட்டத்திறமை பற்றிய பெருமை மிகவும் இருந்தது. நண்பன் திடுமெனக் காட்டிய திறங்கண்டு அவன் வியப்படைந்தான். இருந்தபோதிலும், தான் புதிய பையனாயினும், இதுவகையில் பின்னைடந்தவன் அல்லனென்றும், ரக்பியின் பெருமையில் பங்கு கொள்வதுமட்டுமன்றித் தன் சிறு அளவில்தான் அதன் பெருமையை வளர்க்கும் தகுதியுடையவனே என்றும் காட்ட அவன் விரும்பினான். எனவே, ஈஸ்ட் முந்திக் கொண்டு விரைந்தாலும், ஏரிக்கரையை அவன் எட்டிய போது, டாம் இருமுழத்துக்குள்ளாக அவனைப் பின் தொடர்ந்து வந்து சேர்ந்தான்.

ரு பையன்களும் மூச்சு வாங்க

ளைத்தனர். ஓரளவு மூச்சு சமநிலைப்பட்டபின், ஈஸ்ட் டாமை நோக்கி, "நீயும் மோசமில்லை டாம்! ரக்பியில் ஓட்டப் பந்தயங்களில் நீ புகழ்பெறப்போவது உறுதி” என்று பாராட்டினான்.

"அண்ணனாகிய நீ அடைந்துள்ள புகழ் எப்போதும் எனக்கு வழிகாட்டியாக இருக்கும்” என்று எதிர்பாராட்டுரை தந்தான் டாம்.

66

'ஓட்டத்தால் நாம் மனக்கிளர்ச்சி மட்டும் அடையவில்லை. தொடக்கத்தில் நம் உடலைத் தாக்கிய நவம்பர் மாதப் பிற்பகலின் குளிர் இனி மாலைவரை நம்மைத் தாக்காது.

நவம்பர் மாதம் என்ற நினைவு வந்தவுடனே, டாம், “அது சரி; இந்த நவம்பர் மாதத்திலும் நீ ஏன் வெள்ளைச் சட்டை காற்சட்டை அணிந்திருக்கிறாய்? அது குளிர் தாங்குமா?” என்று கேட்டான்.

66

'அதுவா? இன்று பள்ளி இல்லப் பந்தய ஆட்டம் பள்ளி இல்லம் ஒருபுறமாகவும், பள்ளியின் மற்ற எல்லா மனைகளும் மற்றொரு புறமாகவும் ஆடுவதால் நாம் அனைவரும் பள்ளி இல்லத்தின் நிறமாகி வெள்ளை அணிகிறோம். அத்துடன் புரூக் இந்த அரையாண்டிலேயே என்னை விலா (Quarters) ஆட்டக்காரனாகத் தேர்ந்திருக்கிறார். கீழ்வகுப்புப் பிள்ளைகளில் வேறு எவருக்கும் கிடையாத நன்மதிப்பு இது. இதற்குமுன் கீழ்வகுப்பில் ஜேம்ஸுக்கு இந்த உரிமை தரப்பட்டதுண்டு. ஆனால், அவன் வயதில் பதினான்குக்கு மேற்பட்டவன்."