3. பந்தாட்டம்
'டாம்! இதுதான் ஆட்ட வெளி. இது எவ்வளவு நீளமும் அகலமும் உடையதாயிருக்கிறது, பார்த்தாயா? நம் முன் இதோ நிற்கும் இரண்டு கம்பங்களும் இப்பக்கத்திலுள்ள இலக்குக் கோல்கள். அதோ தொலைவில் தெரிகின்றனவே, அவைகள்தாம் எதிர் இலக்குக் கோல்கள். கோல்கள் மீதிருக்கும் விட்டத்துக்கு பந்து சென்றால்தான், ஒரு கோல் கெலிப்பு ஆகும். நீ இதற்குமுன் உதை பந்து ஆடியிருப்பாய் என்று நினைக்கிறேன்,' என்றான் ஈஸ்ட்.
மேலாக, ஆனால், கோல்களுக்கு கு இடையில்
"நான் இதற்கு முன் படித்த பள்ளியில் உதை பந்து கிடையாது. ஆனால். சில சமயம் நான் ஊர்வெளியில் சிறுவருடன் ஆடுவதுண்டு,” என்று டாம் விடையிறுத்தான்.
நான் உனக்குக்கோல்
"ஆகா! அப்படியானால், காவலனாகவே (Goal-Keeper) இடம் வாங்கித் தருகிறேன். பந்து கோல்வரை தாண்டி உருண்டால், தாச்சிதான் அதைக் கையாட வேண்டும். ஏனென்றால், எதிர்க் கட்சியாளர் யாராவது அதைத் தீண்டிவிட்டால், பந்தெறி உரிமை அவர்களுக்குப் போய்விடும் கோலடியும் அவர்களுக்குப் போய்விடும்."
"மிகவும் மகிழ்ச்சி! இந்த உரிமை வாங்கித் தந்தால் நான் நன்றியுடைவனாயிருப்பேன்.”
"கட்டாயம்! நீ என் நண்பன். நீ திறமையுடையவனா யிருந்தால், நீயும் கள ஆட்டக்காரனாக, அதாவது, என்னைப் போல. விலா ஆட்டக்காரனாகவே, அல்லது முன்புற ஆட்டக் காரனாகவோ ஆய்விடலாம். ஆனால், நான் அறிந்தவரை, புத்தகம் படித்துப் படிப்பில் முன்னேறுவதைவிட, ஆட்டக் காரனாகக் களத்தில் முன்னேறுவது தான் கடினம். ஏனென்றால், இதில்தான் போட்டி மிகுதி; போட்டி கடுமையாகவும் இருக்கும்.”