பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 ||- ||--

அப்பாத்துரையம் – 8

of the week) வந்தபோதுதான், அமைதி மெல்லத் தலைநீட்டிற்று. ஆடிக்கொண்டிருந்தவர்களும் தலைவரைச் சூழ அணியாக நின்றனர். வேறிடங்களிலிருந்தவர்களும் மணி கேட்டு உள்ளே வந்தனர்.

வாரத் தலைவர், அந்தந்த வாரத்தில் பள்ளி நேரங்களுக்குப் புறம்பாகச் சிறுவர்களை இயக்குவதற்கென்று தேரப்படுவர். அவருடன் அவ்வக்குழுவின் சட்டாம் பிள்ளைகள் ஒத்துழைப்பர். தத்தம் குழுவில் அமைதியை நிலைநாட்டுவது அவர்கள் பொறுப்பு.

வாரத் தலைவர் வாயிலண்டை இருந்த ஒரு மேடைப் பலகை மீது ஏறி நின்றார். சட்டாம்பிள்ளைகளில் வாரச் சட்டாம்பிள்ளை மட்டும் அருகில் நின்றான். மற்ற மூன்று சட்டாம்பிள்ளைகளும் தத்தம் குழுவின் பின் நின்று, ‘அமைதி’ என்று கூவிக் கொண்டிருந்தனர்.

ஆறாவது படிவம் வாயிலருகே அணிவகுத்தது நின்றது. அதில் முப்பது பேர் இருந்தனர். அவர்கள் கிட்டத்தட்ட இளைஞர்கள். சிலர் குறுமீசை வைத்துப் பெருமையுடன் அதைத் தடவிக் கொண்டிருந்தனர். ஐந்தாம் படிவத்தில் இதன் இரண்டு பங்குப் பேர் இருந்தனர். அவர்கள் ஆறாம் படிவத்தைவிட வயதில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்தவர்களாகவே இருந்தார்கள். இவர்கள் ஆறாம் படிவத்துக்குச் சற்றுப் பின்புறமாக அணிவகுத்து நின்றனர். துணை ஐந்தாம் படிவம் என்று அந்நாள் அழைக்கப்பட்ட நான்காம் படிவத்தினர் அவர்களுக்கு எதிர்த்திசையில் வலது புறமாக நின்றார்கள். இளம் படிவத்தினராகிய பிறர் நடுவே நீள அணி அணியாக நின்றனர்.

அணிகளனைத்தின் நடுவே, சட்டாம்பிள்ளைகள் முன்னும் பின்னும் சென்று மேற்பார்வை செய்யச் செல்லும்படி ஓர் இடைவழி விடப்பட்டிருந்தது.

வாரச் சட்டாம்பிள்ளை ஆறாம் படிவத்திலிருந்து தொடங்கிப் பெயர் வாசித்தான். பெயருக்குரிய ஒவ்வொரு பையனும் உடனே கை தூக்கி, 'இதோ வணக்கம்' என்றான். பெயரணி முடிந்ததும் ஆறாம் படிவத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டும் சட்டாம்பிள்ளைகளுடன் பிள்ளைகளைக் கவனித்தாபம்