பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

அப்பாத்துரையம் – 8

பள்ளி இல்லத்தின் கள ஆட்டக்காரரிடையே ஈஸ்ட விலா ஆட்டக்காரருள் ஒருவராக நின்றான். இரு பக்கங்களிலும் இலக்குக் காவலரிடையே இருந்த வயது வேறுபாடும், உயர வேறுபாடும் மற்ற ஆட்டக்காரரிடமும் இருந்தன. பள்ளி இல்லம் எளிதில் வெல்ல முடியாது, நேர்மாறாக எளிதில் பள்ளிக்கு விட்டுக் கொடுத்து விடுவர் என்றுதான் எவரும் அச்சமயம் கூறமுடியும். அத்துடன் பள்ளி ஆட்டக்காரர் பல ஆண்டு ஆடிப், பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றவர்கள். ஆயினும் பள்ளி இல்லத்தின் ஆட்டக் காரர்கள் ஒரு சிறிதும் இவைபற்றிச் சிந்திப்பதாகத் தெரியவில்லை. தாம் நல்ல ஆட்டம் ஆடுவோம் என்பதை அவர்கள் அறிவார்கள். அதற்கான உச்ச நிலைப் பயிற்சியே அவர்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. களத்தலைவராகிய புரூக் சென்ற அரையாண்டு வரை பற்றி இல்லத் தலைவராயிருந்தவர் தாம் பள்ளி இல்லம் அவரால்தான் பயிற்றுவிக்கப்பட்டிருந்தது. ப்போது அவர் பள்ளியின் களத் தலைவராக உயர்வு பெற்றுவிட்டதால், அவர் பயிற்சி முறையை அவர் தம்பி இளைய புரூக்கே இருந்து அவர் பெயர் கெடாத வகையில் நடத்தி வந்தார். பள்ளித் தலைவரின் பயிற்சியே இப்போது பள்ளி இல்லத்தின் பக்கம் இருந்தது.

பள்ளி இல்லத்தின் பக்கத்தில் மூத்த புரூக்கின் கைவண்ணம் நன்கு தெரிந்தது. அவர் கீழிருந்து பழகிய ஓர் ஆறாம் படிவ மாணவனே இலக்குக்காவலர்களின் தலைவனாகியிருந்தான். இலக்குக் கோலுக்குப் பின்னாலுள்ள இடத்தின் ஒவ்வோர் அங்குலமும் காவலர் ஆட்சியில் இருக்கும்படியாக அவன் அவர்களைப் பரப்பி நிறுத்தியிருந்தான். ஒவ்வொருவருக்கும் இருபுறமும் சரியாகப் பத்து முழம் இடைவெளிதான் இருந்தது. இலக்குச் சரியாகக் காக்கப்படுவதுதான் விளையாட்டின் வெற்றிக்கு உயிர்நிலையாகும் ம் என்பதையும் தலைவன் காவலர்களுக்கு நன்கு அறிவுறுத்தியிருந்தான். இலக்குக்கும் முன்னணிக்கும் இடையே பக்க ஆட்டக்காரர் தம் நிலத்தைக் கருத்துடன் அளந்து பரவலாக நின்றிருந்தனர். இவர்களுக்கப்பால் முன்னணி மூன்று குழுக்களாக வகுக்கப்பெற்று, வார்னர், ஹெட்ஜ், இளைய புரூக் ஆகிய மூன்று தேர்ச்சி பெற்ற முன்னணித் தலைவர்களின் ஆட்சியில் நின்றிருந்தன.