டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
(199
பள்ளிமனைப் பக்கத்தில் ஆட்டக்காரர் வாட்டசாட்ட மானவர்களாகவும் தனிப்பட்ட முறையில் எவ்வளவோ தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தாலும் இத்தகைய கூட்டு அணி வகுப்புக் காணப்பெறவில்லை. இலக்குக் காவலர் தத்தம் மனம்போலக் கும்பு கும்பாக நின்றனர். பக்க ஆட்டக்காரர் (Quarters) யார், முன்னணி ஆட்டக்காரர் (Forwards) யார் என்று அவர்கள் நிற்பதிலிருந்து கூற முடியாது. தவிர, தனித்தனி அணிவகுப்பும் கூட்டு
அணித் தலைமையும் இருப்பதற்கு மாறாக, ஆட்டக்காரரிடையேயும் தலைவரிடையேயும் ‘எளிதில் வென்று விடுவோம்' என்ற தருக்கும் ஒருவருக்கொருவர் தாம் தாம் திறம்பட்ட ஆட்டக்காரர் என்ற போட்டியுணர்ச்சியும் காணப் பட்டன. ஆயினும் இந்தக் குரைபாடுகள்கூட, பள்ளிமனைக்கும் பள்ளி இல்லத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டைச் சரிப்படுத்தக்கூடும் என்று எவரும் உறுதியாக நம்பினர்.
பள்ளி இல்லத்தின் பக்கம் எல்லார் கண்களும் ஒரு திசையில் இருக்கின்றன. எல்லார் வலது கால்களும் முன் வைத்தபடி இருக்கின்றன. எந்த உத்தரவுமில்லாமலே அத்தனை பேரும் சற்று முன்னோக்கி நகர்கின்னர்."எல்லோரும் ஆயத்தமா யிருக்கிறீர்களா?" என்ற கேள்வி மூத்த புரூக்கிடமிருந்து எழுகிறது. மனைப்பக்கமிருந்து சில குரல்கள், இல்லப் பக்கமிருந்து கிட்டத்தட்ட எல்லார் குரல்களும் ‘ஆம்' என்கின்றன. புரூக் ஆறடி பின் செல்கிறார்; பந்து பீரங்கியிலிருந்து சுடப்பட்டகுண்டுபோலச் சுழன்று முழங்கிக்கொண்டு எழுகிறது; பன்னிரண்டடி, பதினைந்தடிக்கும் மேற்படாத உயரத்தில், எழுபதிரட்டிமுழ தூரம் அது ஒரே எட்டில் தாவுகிறது. மூத்த புரூக் பந்துதைக்குப் பேர்போனவரானாலும் அவர்கூட இதுவரை இத்தகைய திறம்பட்ட உதை கொடுத்ததில்லை என்று எல்லாரும் வியந்து பாராட்டினர்.ஆட்டத்துக்கு இது நல்லூக்கம் தந்தது.
பந்து பள்ளி மனையில் மிகுதி முன்னேறவில்லை. வலிமை வாய்ந்த மனைவீரர் மனைவீரர் கால்கள் அதைப் பின்னோக்கித் தள்ளுகின்றன. இல்லத்துச் சிறுவர்களில் சிற்றெறும்புகள் போல ஒரு பெருங்கூட்டம் அதைச் சுற்றி மொய்க்கிறது. அதனுள்ளும் புறம்பும் கட்டெறும்புகள் போலமனையின் பாரிய உருவங்கள் சுழலுகின்றன.பந்தை எங்கும் பார்க்க முடியவில்லை. அது அங்கும்