200 ||
அப்பாத்துரையம் – 8
இங்கும் செல்லும் போதெல்லாம் மாணவர் திரள் அதை மறைத்துப் புரள்கிறது. பள்ளிமனை நோக்கித் திரள் மெல்ல நகர்கிறது. ஆனால் ஓரடி முன் செல்லுமுன், அது அரையடிபின் தள்ளப்படுகிறது. சில சமயம் முன்னேறிய அளவு பின்னேறியும், சில சமயம் முன்னேறிய தூரத்தை அடுத்து இழந்தும், பள்ளி இல்லம் பந்துடன் மெல்ல மெல்ல, மனையின் பக்கம் அணுகுகிறது. மனையின் எல்லை வரம்பு கடந்துவிட்டது. மனைவீரர் தாக்குதல்கள் கடுமையாகின்றன.
முடியவில்லை.
அது
இரு தரப்புக்களிலும் போராட்டம் மும்முரமாகிவிட்டது. பந்தைக் காணவே ஆனால் செல்லுமிடத்தைச் சுட்டிக்காட்டிய மக்கள் கும்பல் பந்துபோல் சுருண்டு சுருண்டு கறங்குகிறது. ஆட்டத்தில் தேர்ச்சி பெற்றவர் ஒரு புறமும், ஆட்டக்காரர் என்று பெயர்பெற விரும்புபவர்கள் மற்றொரு புறமுமாக அந்த மனிதப் பந்தினுள் இடம்பெறப் போட்டியிடுகின்றனர். இந்தக் கட்டத்தில்தான் மிகக் கடுமையான இடியும் உதையும் கிடைக்கும் என்பது யாருவக்கும் தெரியும். ஆனால் இவை ஒரு பொருட்டல்ல. பந்தை இத்தகைய தறுவாய்களில் தொடும் பெருமைக்கும் புகழுக்கும் அவை ஈடல்ல. இதில் கால் கை முறிந்தால்கூட எவரும் அதைச் சட்டை பண்ணப் போவதில்லை. ஏனென்றால், இத்தகையவர்கள் பள்ளியின் வீரர்களாய், குட்டித் தெய்வங்களாய்விடுவர். அப்பெருமை தனக்கு என்று வரும் என்று தான் பள்ளி இல்லத்தின் ஒவ்வொரு மாணவனும் ஏங்கித் தவம் கிடந்தான்.
'தொப்,தொப்,தொப்!' என்னும் பந்தடிக்கும் ஓசை மட்டுமே கேட்கின்றன.“இதோ பிடி, உதை! பின்னுக்கு அடி! ஆகா, நல்ல அடி! விடாதே! பிடி, பிடி!” என்ற குரல்கள் ஒரே மூச்சில் எழுந்தன. பல சிறுவர்கள் மண்ணில் உருட்டப்பட்டனர்.பலர் மொத்துண்டனர். சிலர் சட்டைகள் தாறுமாறாகக் கிழிந்தன. ஆனால் பந்தைச் சுற்றிய போராட்டம் இவற்றால் தளராமல் ஐந்துகண நேரம் மூச்சுவிட இடையீடில்லாமல் தொடர்ந்தது.
பந்து திடுமெனத் துள்ளிப் பறக்கிறது. அது பள்ளி ல்லத்தின் பக்கம் தாவி எழுந்து முன்னேறிற்று. முன் பந்திருந்த டத்தில் கூடியிருந்த கும்பு கணநேரத்தில் கலைந்தது. பள்ளி இல்லத்திலேயே பந்து விட்டதனால், இல்லத்துச் சிறுவர்களிடையே