பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

201

பக்க ஆட்டக்காரர்கள், ‘எச்சரிப்பாயிருங்கள்! பந்தை விடாதேயுங்கள்!' என்ற கூக்குரல் எழுப்பினர்.

பள்ளி இல்லத்தின் அரிய கட்டுப்பாடு இந்நேரத்தில் விலை மதிப்பற்றிதாயிருந்தது. முன்னேறிச் சென்று மனைப்பக்கம் கும்பு கூடிய போதுகூட, முன்னணி ஆட்டக்காரரும் வேறு ஒரு சிலரும்தான் தம் இடம் விட்டுச் சென்றிருந்தனர். மற்றவர்கள் தத்தம் இடத்தைவிட்டு மிகுதி நகராமலே ஆட்டத்தின் விருவிருப்பில் கலந்து கொண்டிருந்தனர். இப்போது பந்து தங்கள் முன்னணி கடந்து வந்ததும், பக்க ஆட்டக்காரர் தங்கள் கடமையையும் கால் வரிசைகளையும் காட்ட விரைந்துமுன் வந்தனர். அவர்கள் பந்தை முப்புறமும் வளைந்து முன் செலுத்த முனைந்தனர்.

ஆனால், பள்ளிமனையிலிருந்து இரண்டு தேர்ந்தநெட்டை உருவங்கள் பந்தை நோக்கிப் பாய்கின்றன. அவர்கள் மனையின் முன்னணி வீரர். ஒரே உதையில் பந்தை இல்லத்தின் இலக்கு நோக்கி உதைக்கும் உறுதியுடன் அவர்கள் வருகின்றனர். அதேசமயம் இல்லத்துச் சிறுவர் ஆடவில்லை, அசையவில்லை! அவர்கள் காலும் கண்ணும் உடலின் ஒவ்வொரு தசையும் பந்தையே குறிக்கொண்டு நிற்கின்றன.

வேகமாக வந்த நெட்டை உருவங்கள் தம் வேகத்தாலேயே தோல்வியுறுகின்றனர். அவர்கள் பந்தைத் தாண்டிச் சென்ற பின்பே, பந்து தம் கால்களுடன் வரவில்லை என்று கண்டு திரும்புகின்றனர். ஆனால், திரும்பிச் செல்லும் வழி இப்போது எளிதாயில்லை.

பள்ளி இல்லத்துக்கு இது நல்ல வாய்ப்பான சமயம். இதனைப் பயன்படுத்தும் இல்லத்து வீரன், வருகிற ஆண்டு முழுவதும் வீரர்களின் வீரனாகப் பெருமையடைவான். இப்புழை நாடி மூவர் பந்தை நோக்கி வருகின்றனர். இவருர் ஸ்பீடிகட், ஃவிளாஷ்மன் (Speedieut and Flashman) என்ற இரு பள்ளி இல்லப் புலிகள். அவர்கள் எப்போதும் தாம் உழைப்பதைவிடப் பிறர் உழைப்பதைத் தமதாக்குவதிலும், பிற சின்னஞ்சிறு பிள்ளைகளை அடக்கிக் கொடுமைப்படுத்து வதிலும் கருத்துடையவர்கள். போலி வீம்பு வேட்டைக்கும் தகுதியற்ற புகழுக்கும் அவர்கள் பாடுபடுபவர்கள். பிள்ளைகள் பெரும்பாலார் அவர்களுக்கு