202
அப்பாத்துரையம் - 8
ஆனால், இவ்விருவரும்
அஞ்சி ஒதுங்கினர். பந்தை எடுக்கப்போவதில்லை. அவ்வாறு பாவனை செய்து குட்டை குழப்பி வெற்றி வீம்படிக்க இருப்பவர்களே என்பதை மூன்றாவது ஆள் அறிந்தான். அவனே இளைய புரூக். அவன் யாரையும் சட்டை செய்யாமல் கன்றை நோக்கிவரும் கற்றாபோல நேரே வருகிறான். அவன் தலை நிமிர்ந்திருக்கிறது. உடல் சற்று முன்னோக்கிச் சரிந்த வண்ணமே. கைகளை விலாவில்
ஊன்றிக்கொண்டு அவன் விரைந்து வருகிறான்.
இரண்டு முரடர்களும் பந்தில் கால் படாமலே சுற்றிச் சுற்றி வருகின்றனர். பள்ளி மனை வீரரோ, அது எத்திசையில் வருகிறது என்பதை அறியமாட்டாமல் வளைய வளைய வருகின்றனர். ஆனால், புரூக் பந்தை நிறுத்தவும் செய்யாமல் விடவும் செய்யாமல் அதை அப்பாலும் இப்பாலும் தட்டிக்கொடுத்துக் கொண்டே மனையின் பக்கம் முன்னேறுகிறான். அவன் குறிப்பறிந்த சில தோழர்கள் பந்தை அவனிடமிருந்து வாங்கி அவனிடமே அனுப்பிக் கொடுத்துக்கொண்டு முன்னேறுகின்றனர்.
ஆட்டம் முக்கால் மணிநேரம் நடந்தாய்விட்டது. முதல் ஆர்வ உணர்ச்சிகள் தளர்ந்துவிட்டன. திறத்தை விட எண்ணிக்கைக்கே இனிவிலை மதிப்பு என்ற நிலை ஏற்பட்டது. முன்னணி ஆட்டக்காரரில் புரூக் தவிர, மற்றவர்கள் எல்லாரும் புழுதி படிந்து கால் முதல் தலைவரை மண்ணிறந்தோய்ந்து காட்சியளிக்கின்றனர். புரூக்கின் வெள்ளாடை மட்டும் அவன் ஆரமைதிக்குச் சான்றாகச் சிறப்பு வாய்ந்து விளங்குகிறது. அவன் நாடி நரம்புகள் இன்னும் சோர்வடையவில்லை. உடல் வலுவைவிட மூளை வலுவை அவன் பயன்படுத்துபவன் என்பதை இப்போது எல்லாரும் உணர்ந்தனர்.அத்துடன் கட்டுப்பாட்டுடன் விளையாடிய இல்ல மாணவரைவிடத் தற்செருக்குடனும் முனைத்த வெளியுடனும் ஆடிய மனைமாணவரே இப்போது மிகுதி சோர்வடைந்திருந்தனர். அவர்கள் தங்கள் தங்கள் இடத்தில் நில்லாமல், அனைவரும் பந்தையே சுற்றிக்கொண்டிருந் ததால் அவர்கள் இலக்குப்பக்கம் காவல் குறைந்தே இருந்தது.
ஆட்டத்தில் இப்போது ஒரு மாறுதல் ஏற்படுவதாகத் தோற்றமிற்று. பள்ளி மனை வீரர் பள்ளியில்லத்துக்குள்ளே நெடுந்தொலை பந்தைக் கொண்டுவந்துவிட்டனர். ஆனால்,பந்து