டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
205
பள்ளி மனையாளர் தம் முந்திய ஆட்டத்தின் தவற்றைத் திருத்தி நற்பெயரெடுக்க அரும்பாடுபட்டனர்.மோசமாய் ஆடிய பலருக்குக் கண்டனமும் சிலருக்குத் தண்டனையும் தரப்பட்டன. தேர்ச்சியில் குறைந்தவர்கள் இலக்குக் காவலிலிருந்து விலக்கப்பட்டும், களத்திலிருந்து காவலுக்கு அனுப்பப்பட்டும் கழிக்கப்பட்டனர்.பொறுக்கியெடுத்த நூற்றிருபது ஆட்டக்காரர் முன்னணிக்கு அனுப்பப்பட்டனர்.
எப்படியும் பந்தைப் பள்ளி இல்ல இலக்கு நோக்கிச் செலுத்தி, முழு வலுவுடன் ஓர் இலக்கு எடுத்துவிடுவது என்று மனைவீரர்கள் மன உறுதி கொண்டனர். இதுவகையில் அவர்கள் மனையின் தலைசிறந்த ஆட்டக் காரனான கிராப் ஜோன்ஸைத் (Crab Jones) தம் இலக்குக்கு நேரே பக்க ஆட்டக்காரனாக அமர்த்தினர். பள்ளி இல்லத்தினர் எக்களிப்பைக் கூட இது சிறிது மட்டுப்படுத்திற்று, ஏனென்றால், கிராப் ஜோன்ஸின் பெயர் ரக்பி கடந்து புகழ்பெற்றிருந்தது.
ஆட்டபாட்டமில்லாமல் ஆர்ந்தமைந்து ஆடுவதில் அவனை விஞ்சியவர் கிடையாது. மதியுலகத்தில் அவனைத் தூக்கி ஒருவன் எறிந்தாலும் சட்டைப்பையிலிட் கை வெளியில் எடுக்காமலே அவன் நிலையாக எழுந்து நின்று விடுவான் என்று அவனைப் பாராட்டிப் பேசுபவர் கூறுவது உண்டு.
'எல்லாரும் பந்து ஆட ஒருமுகப்பட்டு விட்டீர்களா?’ என்று கேட்கப்படுகிறது. 'ஆம்' என்ற குரல்கள் கிளம்புகின்றன. பந்து வானளாகவத் தலைவரால் உதைத்தெறியப்படுகிறது. அது உயரத் தெறிந்தெழுந்து நிலஉலகைத் தாக்கவரும் சுழல் குண்டு போல மாலைக் கதிரொளியில் திகழ்கிறது. எல்லாரும் அண்ணாந்து பந்து விழும் பக்கத்தையே பார்க்கின்றனர். விழுமுன்னே கால்கள் விரைகின்றன. மனைமாணவர் கால்களில் உதைத்தும் உருட்டியும் நெக்கியும் மனைப்பக்கம் கடந்து இல்லப்பக்கம் கொண்டு வருகின்றனர்.
இல்லத்தின் முன்னணியினர் கிளர்ந்தெழுகின்றனர். முன்னணியும் மும்முரப்போரில் முனைகின்றன. வார்னர், ஹெட்ஜ், புரூக் (Warner, Hedge and Broke) ஆகிய மூவரும் மூன்று படைத்தலைவர்கள்போல மூன்று அணிகளையும் காத்து நின்று, எதிரியைக் கடந்து பந்தை மறுபக்கம் கொண்டுபோக