208
அப்பாத்துரையம் – 8
தொடங்கிய இறுதி ஆட்டத்தைப் பார்க்க, இதுவரை ஆடியது முழுவதும் சிறு குழந்தைகள் ஆட்டம் என்று பார்ப்பவருக்குப் பட்டது. மனைவீரர் தாக்குதல் வெறிமிக்கதாயிருந்தது. இல்லத்தின் பக்கம் நின்று வார்னரும் ஹெட்ஜும் முழுவலவுடன் அதைத் தடுக்கப் பார்த்தும் தடுக்க முடியவில்லை. புரூக் நெருக்கடிக்குள் நுழைந்து பந்தை நிறுத்தப் பார்கிறார்; ஆனால், பந்து அவர் காலிற்பட்டும். அவரை மீறிச் சென்று விடுகிறது. 'இலக்குக் காவல்; இலக்குக் காவல்' என்று அவர் கூவுகிறார்; கிராப் ஜான்ஸ் காலில் அது சிறிது சிக்குகிறது; ஆனால், அவன் உதைக்குமுன் தாக்குதல் அலை அவனைப் தாவிப் பந்துடன் செல்லுகிறது; விழுந்த பின் அமைதியாய் எழுந்து; வாயிலுள்ள தூசு தும்புகளை அவன் துடைக்கிறான். கிராப் ஜோன்ஸ் காலில் அகப்பட்ட பந்து தப்பியது இன்று தான் முதல் தடவை!
பந்து இலக்கு நோக்கிப் பாய்கிறது. அதன்பின் ஆறுமுழத் தொலைவில் தாக்குதல் அலை புரண்டு வருகிறது. இலக்கருகில் அப்போது பந்தின் திசையில் இல்லத்தின் சட்டாம் பிள்ளைகளுள் ஒருவன் நிற்கிறான். அவன் காவலர் கடமையில் தேர்ந்தவன். அவன் அருகே டாம் பிரௌண் நிற்கிறான். இந்த ஒரு ஆட்டத்துக்குள் அவன் நல்ல ஆட்டப் பயிற்சியின் நுணுக்கங்களை ஓரளவு உன்னிப்பாக அறிந்து கொண்டான். தன் தோழன் ஈஸ்ட்டுக்குக் கிடைத்த வாய்ப்பும் அதில் அவனுக்குக் கிட்டிய புகழும் அவனை ஊக்கின. தனக்கும் இன்று வாய்ப்பு நெருங்கி வருகிறது என்று அவன் நாடி நரம்புகள் கிளந்தெழுந்தன. அவன் ஆர்வத்துடன் அவன் குடும்பப் பெருமையும் கலந்து ஊக்கின.
அ
சட்டாம்பிள்ளை பந்தைக் காலாலணைத்துக் கொண்டு, வளைந்து நின்று தாக்குதலைத் தடுக்க முயன்றான். அவனுக்குப் பின் டாம் பந்தை எதிர்நோக்கி அலையை எதிர்பார்த்து ன்றிருந்தான். சட்டாம் பிள்ளையின் கால்களின் கீழாக அலைமோதிப் பந்தையும் அடித்துச் சென்றது. அவன் முதுகு மீது வளைந்தடித்து அலையின் மேற்பகுதி அவனை வீழ்த்திச் சென்றது. டாமுக்கு என்ன ஆயிற்று என்று யாரும் கவனிக்க முடியவில்லை. அலை அவன் மீதும் மோதி அடித்துச் சென்றது. அவன் நிலத்தோடு நிலமாக நசுக்கப்பட்டான். அவன் மீது